ஞாயிறு, 7 மே, 2023

#1192 - பரலோகம் எப்படியிருக்கும்?

#1192 - *பரலோகம் எப்படியிருக்கும்?*

*பதில்* : பூமியில் நம்மில் பலரும் ஆச்சிரியமான இடங்களை பார்த்து பிரமித்திருக்கலாம். ஆனால் பரலோகம் என்பது ஒரு எதிர்கால இடம். ஒரு நித்திய குடியிருப்பு - அது நாம் எப்போதும் காணக்கூடிய எதையும் விட அற்புதமானதே.

அது என்ன மாதிரி இருக்கிறது? "அதன் மதிலின் கட்டுமானம் வச்சிரக்கல்லால் ஆனது; நகரம் தெளிவான கண்ணாடியைப் போல சுத்தமான தங்கமாயிருந்தது" (வெளிப்படுத்துதல் 21:18).

ஆனால் வைரமும், வைடூரியமும், தங்கமும் பூமிக்குரியவையாயிற்றே!! கிறிஸ்துவின் வருகையில் அனைத்தும் உருகிப்போகுமே !!

அவை ஆன்மீக உலகில் இருக்காது.

வேதாகமத்தில் பரலோகத்தைக் குறித்து சொல்லப்பட்ட சில வசனங்களை கீழே பதிவிட்ட பின்னர் கருத்துக்களை எழுதுகிறேன்:

1- வெளி. 19:11-14 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

2- வெளி. 22:1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

3- வெளி. 22:2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

4- பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன, அங்கு நாம் ஆண்டவருடன்  வசிப்போம் - யோவான் 14:2-3

வர விரும்பும் எவருக்கும் பரலோகத்தில் நிறைய இடம் இருக்கிறது என்பதே இயேசு குறிப்பிடும் கருத்து. இடப்பற்றாக்குறையால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதில்லை.

5- வெளி. 21:11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

6- வெளி. 21:12 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

7- வெளி. 21:13 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

8- வெளி. 21:14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

9- வெளி. 21:15 என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

10- வெளி. 21:16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

11- வெளி. 21:17 அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.

12- வெளி. 21:18 அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

13- வெளி. 21:19 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

14- வெளி. 21:20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

15- வெளி. 21:21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது

16- 1யோ. 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

வெளி. 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

வெளி. 21:24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

வெளி. 21:25 அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

வெளி. 21:26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

வெளி. 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

வெளிப்படுத்தல் புத்தகம் குறியீடுகளால் ஆனது. வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அந்த குறியீட்டை அகற்றி/உடைத்து அர்த்தம் கொள்ளவேண்டும். இதில் சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நாம் அப்படியே அர்த்தங்கொள்ளமுடியாது. அந்த குறியீடுகளை வெளிப்படுத்தி தான் அர்த்தங்கொள்ள வேண்டும் – வெளி. 1:1

வேதத்தில் உள்ள 66 புத்தகங்களில் - 65 புத்தகங்களை காட்டிலும் வெகுவாக குறியீடுகளால் நிறைந்த புத்தகம் (Signified) இந்த வெளிப்படுத்தல் புத்தகம்.

பரலோகம் ஒரு கதையில் வரும் இடம் அல்ல.

அது உன்னதமான தேவனின் பரிசுத்த வாசஸ்தலமாகும்.

அதன் சிறப்பை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கொண்ட நாம் வாழும் நித்திய இடத்தைப் பற்றிய அழகான விளக்கங்களை வேதம் நமக்குத் தருகிறது.

பௌதிக உலகத்தை மட்டுமே அனுபவித்தவர்களுக்கு ஆன்மீக இடத்தை எப்படி விவரிப்பது?

பரலோகம் போய் வந்தேன், ஆண்டவரை பார்த்தேன், அப்படி இருந்தார் இப்படி இருந்தார், என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போய் சுற்றிக்காட்டினார், உங்களுடைய கடிதத்தை நேரடியாக நான் அவரிடம் வாசித்துக் காண்பித்தேன், மீண்டும் செல்கிறேன் என்று *எவர் சொன்னாலும் – அதனை நம்பி ஏமாறவேண்டாம்*. அத்தனையும் பச்சை பொய்கள்.

கிறிஸ்துவைத் தவிர எவரும் பரலேகம் போய் திரும்பி இங்கு பூமிக்கு வந்து ஜனங்களிடம் பேசமுடியாது !! யோ. 3:13, 1:18, 6:46

யோவான் அப்போஸ்தலனே – ஒப்பனையாகவே சொல்கிறார்!!

குதிரையும் சிங்கமும் கழுகும் பொன்னும் வைரமும் வச்சிரக்கல்லும் போன்ற அத்தனையும் இவ்வுலகத்திற்குறியவை. அங்கு கண்ட தரிசனத்தை நமக்கு விளக்கும்படிக்கு இவைகளை பயன்படுத்தி ஒப்பனையாக சொல்லியிருக்கிறது.

பரலோகத்தைக் குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் வித்தைக்காரர்களுக்கு விலை போய்விடவேண்டாம்.

பரலோகம் என்பது உண்மை என்னும் விபரங்களுக்கு #1146ஐ காணலாம்.

வெளிப்படுத்தல் முழு புத்தகத்தையும் தனி கண்ணோட்டங்களாக விரிவாக நாம் வேத வகுப்புகளில் படித்திருக்கிறோம். அனைத்தையும் *வேதம் அறிவோம்* என்னும்  YouTube Channelல் தனி Playlistஆக கொடுத்துள்ளோம். அதில் கண்டு கூடுதல் தகல்களை பெற்றுக்கொள்ளலாம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Q&A Book ஆர்டர் செய்ய :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

-------------------------*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக