#1191 - *நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் என்ற வெளிப்படுத்தல் 1:18ம் வசனத்தை விளக்கவும்.*
*பதில்* : இந்த வசனத்தை விளக்குவதற்கு முன்னர் அந்த சூழலை எழுத பிரியப்படுகிறேன்.
உன்னதமான தரிசனத்தை;
அன்புக்குறிய யோவான் அப்போஸ்தலனுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தி அதை எழுத சொன்னபோது கூறிய வார்த்தைகளில் ஒரு பகுதி இவை.
*கவனிக்க:*
சுமார் 3½ ஆண்டுகள் கூடவே இருந்தவரும்;
அன்பான சீஷன் (யோ. 21:20) என்று பெயர் பெற்றிருந்தும்,
அவர் தோளில் சாய்ந்து கொண்டிருக்கும் (யோ. 13:23) அளவிற்கு நெருக்கமானவரும்,
மற்ற 10 அப்போஸ்தலர்கள் அனைவரும் பயத்தில் ஓடி ஒளிந்துக்கொண்டாலும், சிலுவையின் அருகில் நின்றவருமான (யோ. 19:26-27) இந்த யோவான் அப்போஸ்தலன்,
தன் ஆண்டவரை காணும் போது அவரது தோற்றத்தை எவ்வாறு ஒப்பீடு செய்கிறார் என்று கவனியுங்கள்:
வெளி. 1:12-19 ”அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது,
ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே,
நிலையங்கி தரித்து,
மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த
*மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்*.
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது;
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது;
அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; *நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்*. நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;” !!
*நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்* என்ற வாக்கியத்தின் விளக்கத்திற்கு வருகிறேன்:
"பாதாளம்" - ᾅδης Hadēs, என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை, பாதாள உலகத்தைக் குறிக்கிறது.
உலகத்தை விட்டு பிரிந்த ஆவிகள் தங்குமிடம்; இறந்தவர்களின் பகுதி.
இந்த விஷயத்தில் வேத எழுத்தர்களின் கருத்துகளின் விளக்கத்திற்கு, லூக்கா 16:22-31 குறிப்பு மற்றும் யோபு 10:21-22 வசனங்களைக் காணலாம்.
*திறவுகோலை உடையவராயிருக்கிறேன்* என்ற வாக்கியமானது – நமது கண்களுக்கு தெரியாத அந்த உலகின் மீது அதிகாரத்தை வைத்திருப்பதாகும்.
இரட்சகர் இந்த அதிகாரம் கொண்டவராக தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் (யோ. 10:18; அப். 3:15; 2:32; 2:24).
இதன் மூலம் இந்த இருண்ட உலகின் மேலாதிக்கமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மத். 28:18; 11:27; யோ. 17:2; 3:35)
இவ்வாக்கியத்தில் வரும் “*மரணத்திற்கும்*” என்ற வார்த்தை அந்த உலகில் மரணம் ஆட்சி செய்தாலும் அனைத்து பரந்த-விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் இரட்சகர் இயேசு கிறிஸ்து திறவுகோல் வைத்திருக்கிறார்.
மேலும் அவர் விரும்பும் போது தேர்ந்தெடுக்கும் அனைவரையும் விடுவிப்பார்.
கிறிஸ்து எப்போதும் வாழ்வது போல; இறந்தவர்களின் பகுதிகள் மற்றும் முழு ஆவிகளின் உலகத்தின் மீதும் அவர் எப்போதும் இந்த அதிகாரத்தை வைத்திருப்பதால், நமது கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை எந்தவித பயத்தையும் போக்குகிறது என குறிப்பிடலாம்.
கிறிஸ்து பிரவேசித்த ஒரு உலகத்தில் நுழைவதற்கு நாம் பயப்படத் தேவையில்லை. பரதீசிலிருந்து அவர் வெளிப்பட்டு, புகழ்பெற்ற வெற்றியை அடைந்தவர். பரலோகத்தில் ஆட்சி செய்யும் உன்னதமானவர் நம்மை ஆதரிக்கிறவர். அவருடைய வல்லமை இரட்சகரின் அனுமதிக்கு அப்பாற்பட்டது அல்ல. மேலும் அவருடைய சொந்த நேரத்தில் இரட்சகர் நம்மையும் உயிருடன் எழுப்புவார்.
பாதாளத்திலுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பிற்கு பிறகு நித்திய அழிவை பெறும்படிக்கு நரகத்திற்கும்;
பரதீசிலுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பிற்கு பிறகு நித்திய வாழ்வை பெறும்படிக்கு பரலோகத்திற்கும் அனுப்பப்படுவோம். மத். 25:31-46
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக