*வேதாகமத்தில் எண்கள் - #3 (மூன்று)*
By : Eddy Joel Silsbee
பிதா, குமாரன் பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
இன்று 3ம் எண்-ஐக் குறித்து பார்க்கப்போகிறோம்.
பிதா, குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்று தேவத்துவதை குறிப்பது (1 யோ. 5:8).
இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். (1 யோ. 5:7)
... 3 எனும் அந்த எண் வடிவமானது துவக்கம் மத்தியம் & முடிவு என்று 3 புள்ளிகள் உள்ளது.
3 வது நாளில் பூமி தண்ணீரிலிருந்து பிரிக்கப்பட்டு *ஜீவியம்* துவங்கியது. ஆதி. 1: 9-13.
நோவாவின் கால வெள்ளத்திற்குப் பிறகு மனிதகுலம் நோவாவின் மூன்று மகன்களிடமிருந்து துவங்குகிறது: சேம், காம் மற்றும் யாபேத் [ஆதி. 10: 1-32].
ஆபிரகாம் 3 தூதர்களை பார்த்தார். அவர்களுக்கு 3 படி மாவில் ஆகாரம் கொடுக்கப்பட்டது. (ஆதி. 18:1,2,6)
மோரியா மலைக்கு மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு ஆபிரகாம் தனது மகனை பலியிடும்பட செல்கிறார். ஆதி. 22: 1-4.
குழந்தை மோசே தனது தாயால் மூன்று மாதங்கள் மறைத்து வைக்கப்பட்டார் [யாத்திராகமம் 2: 1] மற்றும் வயது வந்த மோசே பார்வோனிடம் வேண்டுகோள் விடுத்து, மோசே தனது மக்களை மூன்று நாள் பயணத்தில் வனாந்தரத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார் [யாத். 3:18 ].
ஆசரிப்பு கூடாரத்திலும், பின்னர் எருசலேமில் உள்ள தேவாலயத்திலும் வாசஸ்தல பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்று 3 பிரிவுகள் இருந்தன. யாத். 27: 9; 26: 1-30, 35-37; 31-34; 38: 9-20; 21-31; 40: 1-33; 1 இரா. 6: 1-37.
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 3 அற்புதமான ஆசீர்வாதங்களை கொடுக்கிறார். (எண். 6:23-26)
சீனாய் மலையில் கர்த்தர் தம்முடைய நியாயப்பிரமாணத்தை ‘மூன்றாம் நாளில்’ கொடுக்க இறங்கினார் (யாத். 19:11).
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ! (ஏசா. 6:3)
யோனா 3 நாள் மீன் வயிற்றில் இருந்தார்.
இயேசு கிறிஸ்து – 3ம் நாள் உயிர்தெழுந்தார்.
கெத்செமனே தோட்டத்திலும் மறுரூபமலையிலும் கிறிஸ்துவுடன் மூன்று சீஷர்கள் இருந்தனர் (மாற்கு 9:2; மத். 26:37), மற்றும் கல்வாரியில் மூன்று சிலுவைகள் இருந்தன.
3முறை பேதுரு மறுதலித்தார் (யோ. 26:69-75)
3முறை இயேசு கிறிஸ்துவினிடம் பேதுரு அறிக்கையிட்டார் (யோ. 21:15-17)
3பாஷைகளில் - எபிரேயு, லத்தின் & கிரேக்க பாஷையில் ”இயேசு யூதருடைய இராஜா” என்று சிலுவையில் எழுதப்பட்டது. (யோ. 19:20)
இயேசு கிறிஸ்துவோடு இரண்டு கள்ளர்களும் சிலுவையில் அறையப்பட்டு – 3 சிலுவைகள் இருந்தது!
இயேசு மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுந்தார். [மத். 16:21, 17:23, 20:19; மாற்கு 9:31, 10:34; லூக். 9: 22, 18:33, 24:7, 46; அப். 10:40].
சவுல் (பவுல்) மூன்று நாட்கள் கண்பார்வையற்றிருந்தார். [அப். 9: 9].
பரலோக எருசலேமானது நான்கு பக்கங்களிலும் ஒவ்வொன்றுக்கு மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது [வெளி. 21:12].
இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலே (நாமத்தினாலே) பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறோம். மத். 28:19
(வேதத்தை அறியாதவர்கள் - தற்காலங்களில் புதிய அறிமுகமாக 3 முறை தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் கொடுக்க துவங்கியிருக்கிறார்கள் – இது தவறு… இப்படிப்பட்ட போதனைக்காரர்களிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளவும். கவனம் !! )
நம் வாழ்க்கையின் ஆரம்பம், மத்தியம் & முடிவு என்று அனைத்திலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்வோம்!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/dz96CdiVrHg
வேதாகம எண்கள் #3ஐக் குறித்த விரிவான தகவலுக்கும் வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://www.youtube.com/watch?v=zaG5r_kYgB0&t=3205s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக