சனி, 31 ஆகஸ்ட், 2019

#395 - இதனை (அந்நியபாஷை) வேதத்தின் மூல பாஷையான கிரேக்கு மொழியில் எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

#395 - *அந்நிய பாஷை என்பது ஆங்கில மொழி வேதாகமத்தில் (kjv, niv) tongues என்று தானே உள்ளது*. Tongues என்பதற்கு தமிழில் தாய்மொழிகள் என்று தானே பொருள் அப்படியிருக்க தாய்மொழிகள் என்று மொழி பெயர்காமல் எதற்கு அந்நிய பாஷை என்று மொழி பெயர்த்துள்ளனர்.

2.இதனை (அந்நியபாஷை) வேதத்தின் மூல பாஷையான கிரேக்கு மொழியில் எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

*பதில்* :
ஆதிகாலங்களில் தமிழ் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் சமஸ்கிருதம் பேசிக்கொண்டிருந்த ஒரு சாரார்.

தமிழ் வேதாகமத்தை ஆதியில் மொழிபெயர்த்தது - அவர்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆகவே தான் பல வார்ததைகள் வடமொழி சொற்கள் பயன்படுத்தப்பட்டதை காணமுடியும்.

உதா: தேவன், ஞானஸ்நானம், பாஷை என்பதெல்லாம் வடமொழி சொற்களே.

அந்நியபாஷை என்று தமிழ் வேதாகமத்தில் வரும் வார்த்தைக்கு மூல மொழியான கிரேக்கத்தில் – க்லோசா என்று சொல்லப்படுகிறது.

க்லோசா என்றால் – அறியாத / கல்லாத மொழி பேசுதல் என்று பொருள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக