*வேதாகமத்தில் எண்கள் - #4 (நான்கு)*
By : Eddy Joel Silsbee
உலகத்தையும் சர்வ லோகத்தையும் படைத்த நம் தேவனின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
தொடர்ந்து நாம் பார்த்து வருகிற முறைப்படியே இன்று வேதாகமத்தில் வரும் எண்4ஐ பார்க்கலாம்.
4ம் எண் உலகத்தை குறிக்கிறது.
4 திசைகள் – வெளி. 7:1, 20:8, சகரி. 2:6
4 காற்றுகள் – வெளி. 7:1
உலகத்தை குறித்த விஷயங்களில், 4ம் எண்னை வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.
4ஜீவ ராசிகள் (7:11), 4தூதர்கள் (9:14), 4காற்றுகள் (7:1), 4பிரதிபலிப்புகள் (வெளி 8:5), 4அழிவிற்கான எக்காள தொனி (வெளி. 8:7-13), 4கொம்புகள் (9:13)
4வகையில் உலகத்தின் ஜனங்கள் பிரித்து காண்பிக்கப்பட்டு இருக்கிறது (வெளி. 11:9, 13:7, 14:6, 17:15)
4ம் நாளில் உலகம் உருவாக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்திலிருந்து 4 நதிகளாக ஓடினது. ஆதி. 2:10
4பெரிய இராஜ்யங்களை குறித்து தானியேல் உரைத்தார். தானி. 2, 7
4குதிரைகளை குறித்த சகரியாவின் தீர்க்கதரிசனம். சகரியா 1:18-21, 6:1-8
மத்தேயு மாற்கு லூக்கா யோவான் என்று 4சுவிசேஷ புத்தகங்கள்..
(உலகத்தின் அனைத்து ஜனங்களுக்கும்) புறஜாதியினருக்கும் சுவிசேஷம் அறிவிக்கும்படியாக பேதுருவிற்கு காண்பிக்கப்பட்ட 4 முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டி !! அப். 10:11
4ம் எண் உலகமும், 3ம் எண் தேவத்துவமும் சேர்ந்து வரும் கணக்குகளில் உள்ள ஆச்சரியங்கள் – வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம்.
உலகில் (4) வாசம் செய்யும் நாம் தேவனை (1) தேடும் போது கிருபையை (5) பெற்றுக்கொள்கிறோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/_SmppF63QMA
வேதாகம எண்கள் #4ஐக் குறித்த விரிவான தகவலுக்கும் வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://youtu.be/ZIbfxB21S6k?t=420s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக