*வேதாகமத்தில் எண்கள் - #2 (இரண்டு)*
By : Eddy Joel Silsbee
மகத்துவமான தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துகள்.
இன்று எண் 2ஐ குறித்து பார்க்கப்போகிறோம்.
2ம் எண் - *வேறுபாடு, பிரிவு, பிளவு அல்லது இரண்டின் ஒற்றுமையின் உருவமாக இருக்கலாம்*
வெளிச்சத்தை உண்டு பண்ணி நல்லது என்று கண்ட தேவன்,
இருளை *பிரித்த* போதும்,
ஆகாயத்திற்கும் ஜலத்திற்கும் *பிரிவு* உண்டாகும் போதும்
"நல்லது என்று குறிக்கப்படாதது சுவாரஸ்யம்" ! ஆதி. 1:3-5
இருவராயிருக்கும் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒன்றாகின்றனர். ஆதி. 1:27; 2:20, 24.
உலகம் சிருஷ்டிக்கிக்கப்படுகிற வேளையில் தேவன் வெளிச்சத்தையும் இருளையும் பிரித்தார். ஆதி. 1: 3-4.
பத்து கட்டளைகள் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டது. யாத். 31:18; 32:15; 34:1, 4, 29.
நோவா பேழைக்குள் சுத்தமில்லாத *2* ஜோடிகள் அனுப்பப்பட்டது – ஆதி. 7:2
இருவர் ஒருமையாய் இல்லையென்றால் அது தீமை.
*இரு மனம்* தீமை. (ஆபேல் X காயீன், ஆபிராம் X லோத்) – ஆமோஸ் 3:3, மத். 6:24
இஸ்ரேல் தேசம் இரண்டாக *பிரிந்தது* (1 இராஜ. 12:15-17)
உலகத்திற்கும் தேவனுக்குமாய் இரண்டு வழிகளில் நில்லாமல் ஒரே ஜீவ பாதையை பற்றிக் கொள்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/rvUS_yCFup4
வேதாகம எண்கள் #2ஐக் குறித்த விரிவான தகவலுக்கும் வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக