*வேதாகமத்தில் எண்கள் - #1 (ஒன்று)*
By : *Eddy Joel Silsbee*
சகலத்தையும் அதிசயமாயும் அற்புதமாயும் நடத்தும் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக !
வேதாகமத்தில் உள்ள *எண்களை* குறித்து இனி வரும் பத்து நாட்களுக்கு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும்படியாக சிந்திக்க போகிறோம்.
1, 3, 7, 12, 40, 120 எண்கள் அடிக்கடி வேதாகமத்தில் வருகிறதை கவனித்து இருப்போம். அவை அனைத்துமே அர்த்தமும் நோக்கமும் உள்ளது.
மாற்கு 8:18-21 …. நான் 5 அப்பங்களை 5000 பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், 12 என்றார்கள். நான் 7 அப்பங்களை 4000 பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 7 என்றார்கள். *அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்* !.
*** *இரத்தின சுருக்கமாக* மாத்திரம் எழுதுகிறேன்.
*எண் ஜோதிடம் அல்ல* – எண்ணிக்கையின் நோக்கத்தை ஆழமாய் உணர்ந்து புரிந்து கொள்ள இது உதவும்.
தேவன் எவ்வளவு நேர்த்தியாக சகலத்தையும் வைத்து இருக்கிறார் !! அவருடைய ஞானத்தை யாரால் சொல்லி முடியும்?
1 (ஒன்று) - எபிரேயத்தில் இஹாத்.
“*ஒன்று” - தேவனுடைய நாமம்* (சக. 14:9)
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். சகரியா 14:9
ஒரே தேவனின் தொழுகையான தேவத்துவத்தின் மிகச்சிறந்த எண்ணிக்கையாகும்.
எண் 1 தானாகவே வகுக்கப்படுகிறது. இது வேறு எந்த எண்களிலிருந்தும் சுயாதீனமாக உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் உருவாக்குகிறது.
இது வேதாகமத்தில் ஒற்றுமை மற்றும் முதன்மையையும், தேவத்துவத்தையும் குறிக்கிறது. உபாகமம் 6:4, 1யோ. 5:7
தேவன் ஒருவர் – மத்தியஸ்தரும் ஒருவர் – 1தீமோ. 2:5, யோ. 10:16
இயேசுவும் பிதாவும் “*ஒன்று*” (யோ. 10:30)
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். Joh 10:30
ஒன்று - ஒற்றுமையை குறிக்கிறது (யோ. 17:21-23)
”அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்”. யோ. 17:21-23
மேலும்,
தேவனோடுள்ள உலகத்தின் உறவின் முக்கியத்துவத்தில் ஒன்று என்பது இன்றியமையாததாய் உள்ளது:
ஒரே நம்பிக்கை,
ஒரே சரீரம்,
ஒரே ஆவி;
ஒரே கர்த்தர்,
ஒரே விசுவாசம்,
ஒரே ஞானஸ்நானம்,
ஒரே தேவனும் பிதாவும்; என்று எபே. 4:4-6-லும்
கணவன்-மனைவி (ஒரே மாம்சம்) என்று மத். 19:5-லும் காண்கிறோம்.
வேதத்தை புரிதலோடு நாம் படித்து அசை போடும் போது, நன்மையும் ஆசீர்வாதமும் நம்மை சூழ்ந்து கொள்ளும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
விரிவான தகவலுக்கு வேதாகம எண்கள் #1 வேதவகுப்பின் லிங்க்கை காணவும் : https://youtu.be/tJirDIKhpcc?t=219
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/UL0BltogPWc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக