வியாழன், 6 ஏப்ரல், 2023

#1188 - நன்மை தீமை அறியும் கனியை ஏவாள் புசிக்காமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?

#1188 - *நன்மை தீமை அறியும் கனியை ஏவாள் புசிக்காமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?*

*பதில்* : நன்மை தீமை அறியும் கனியை புசித்த பின்னர் பெற்றுக்கொண்ட கீழ்கண்ட சாபங்கள் அல்லது தண்டனைகளின்றி உலகம் இருந்திருக்கும்.

- தேவனோடு மனிதர் நேரடியாய் உறவாடியிருப்பர். ஆதி. 3:8, ஏசா. 59:2

- பயமில்லாதிருந்திருப்பர். ஆதி. 3:10

- நித்திய ஜீவனுடம் வாழ்வதற்கு அவசியமான ஜீவ விருட்சத்தின் கனியை மனிதர் புசிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பர். ஆதி. 3:22

- பெண்கள் பிள்ளைபெற்றெடுக்கும் போது வேதனை இருந்திருக்காது. ஆதி. 3:16

- ஆண்கள் கடினப்பட்டு அதிக பிரயாசம் படாமலேயே பூமி தனது பலனைக் கொடுத்திருக்கும். ஆதி. 3:17

- எதை விதைத்தானோ அது மாத்திரமே முளைத்திருக்கும். ஆதி. 3:18

- ஏதேன் தோட்டத்தினுள் உள்ள சகல பழங்களையும் நன்மைகளையும் மனிதர் அனுபவித்திருப்பர். ஆதி. 3:23

- தேவனுடைய வார்த்தையை அச்சுபிறழாமல் அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்று தன் கணவருக்கு மனைவியானவள் எப்போதும் உறுதியான துணையாய் இருந்திருப்பாள். ஆதி. 2:17-18

- உலகத்தினுள் பாவம் இல்லாதிருந்திருக்கும். சங். 51:3

மேலே சொன்ன அத்தனை இழப்புகளையும் உணர்ந்து மீண்டும் பிதாவிடம் ஒன்று சேர்வதற்கு, நம்மேல் பிதாவாகிய தேவன் வைத்த அளவற்ற அன்பினிமித்தம் வார்த்தையானவராகிய தமது சொந்த குமாரனான இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பி பாவநிவிர்த்தியான பலியாக்கினார். அவரை அறிந்து அவர் கட்டளைக்கு உட்பட்டு அதன்படி நடக்கும் போது பாவம் நமக்கு மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்போம். யோ. 3:16-17

மாம்சத்தில் பிறந்தவர்களாகிய அனைவரும் மண்ணிற்கு திரும்ப வேண்டியதாகையால் சரீர மரணம் அவசியப்படுகிறது. ஆதி.3:19

கிறிஸ்துவை எதிர்நோக்கி காத்திருந்து உத்தமமாய் மரித்தவர்களும் கிறிஸ்துவின் நிமித்தம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கின்றனர். எபி. 9:15

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
 
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக