*#1175 - பரிசுத்த
ஆவியை எப்படி பெற்றுக்கொள்வது? பரிசுத்த ஆவியானவருக்கும் பரிசுத்த ஆவிக்கும்
வித்தியாசம் உள்ளதா?* விளக்கவும்.
*பதில்* : பரிசுத்த ஆவியானவர்
தேவத்துவத்தில் ஒருவர்.
பிதாவானவர், வார்த்தையானவர் மற்றும் பரிசுத்த
ஆவியானவர் ஆகிய மூவரும் ஆள் தத்துவமுடையவர்கள்.
*தேவத்துவம்*
பரிசுத்த ஆவியானவர்
பிதாவுடனும் குமாரனுடனும் குறிப்பிடப்படுகிறார்.
மத். 3: 16-17 வசனங்களின் மூலம் யோர்தான்
நதியில் நாம் காணும் சம்பவத்தில்;
1- பிதாவானவர்
பரலோகத்திலிருந்து சாட்சியம் அளிக்க
2- வார்த்தையானவராகிய
இயேசுவின் மீது
3- ஆவியானவராகியவர்
இறங்குகிறார்.
யோவான் 15:26ல்
1- பிதாவிடமிருந்து
2- வார்த்தையானவராகிய இயேசு
3- ஆவியானவரை அனுப்பினார்.
மத். 28: 18-20 - ஞானஸ்நானம்
மூவரின் பெயரிலும் (அதிகாரத்தின் பெயரில்) கொடுக்கப்படுகிறது.
ரோ. 15:31 – பரிசுத்த ஆவியானவர்
நிமித்தமும் கிறிஸ்துவின் நிமித்தமும் தேவனிடம் ஜெபம் செய்கிறோம்.
2கொ. 13:14 - இயேசுவின் கிருபை, தேவனின் அன்பு, ஆவியின் ஐக்கியம்.
1யோவான் 5: 7 – மூவரும்
ஒன்றாயிருக்கிறார்கள் (அதாவது எண்ணிக்கையில் மூவர், எண்ணத்தில் ஒருவர்)
மூவரா அல்லது ஒருவரா
என்னும் தலைப்பில் எழுதிய விரிவாய் காண பதில் எண்# 327 மற்றும் எண் #431ஐக் காணவும்.
இப்போது, இந்தக் கேள்வியைக்குறிய
பதிலைக் காணலாம்.
*பரிசுத்த ஆவியானவர்
தேவன்*:
1. சர்வவல்லவர் (Omnipresent) - சங். 139: 7
2. சர்வத்தையும் அறிந்தவர் (Omniscience) - 1கொரி. 2: 10-11
3. சர்வ வல்லமையுள்ளவர் (Omnipotent) - லூக்கா 1:35, மீகா 3: 8
4. நித்தியமானவர் (Eternal)- எபி. 9:14
5. ஜீவனைக் கொடுப்பவர் (Life Giver) - யோவான் 3: 3-6, ரோமர். 8:11
6. சத்தியமானவர் (Truth) - 1 யோவான் 5: 7
7. நீதிபரர் (Justifier) – 1கொரி. 6:11
பரிசுத்த ஆவியினிடத்தில்
பொய் சொல்லுவது *தேவனிடத்தில்* பொய் சொல்லுவது என்றார் பேதுரு அப்போஸ்தலர் 5: 3-4
*பரிசுத்த ஆவியானவரைக்* குறித்த விரிவான பதிலைக் காண பதில் எண் #431ஐக் காணவும்.
பரிசுத்த ஆவியானவரையும்
அவர் மூலமாய் தந்தருளப்பட்ட அற்புத வரங்களையும், அப்போஸ்தலர்களும் அப்போஸ்தலர் நேரடியாய் கைகள்
வைக்கப்பட்டவர்களும் பெற்றுக்கொண்டார்கள். அதற்கான விரிவான பதிலை எண் #862ஐக் காணலாம்.
*பரிசுத்த ஆவியை எவ்வாறு
பெற்றுக் கொள்கிறோம்?*
வசனத்திற்கு கீழ்படியும்
நாமோ பரிசுத்த ஆவியானவரின் பெலம், பரிசுத்தம், தன்மை மற்றும் சுபாவத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
அதன் நிமித்தம்
வசனத்திற்கு கீழ்படிதலை கற்றுக்கொண்டு வசனத்தில் பெலனடைகிறோம் (1பேதுரு 1:2, லூக்கா 4:1)
எழுதப்பட்டிருக்கும்
வார்த்தை – ஆவியானவரின் பட்டயம் என்கிறது வேதம் (எபே. 6:17)
அவருடைய வார்த்தையை
படிக்கும்போது – நம் பாவங்களை உணர்த்துகிறார் (யோ. 15:8)
வார்த்தையினால்
திருத்தப்படுதல் நடந்தேறுகிறது – தீத்து 1:9
வசனத்தை கேட்கும் போது
உணர்த்தப்படுகிறோம் (அப். 2:37)
ஆவியானவர் நம்மை
முன்நடத்துகிறார் – ரோ. 8:14, சங். 119:105
பரிசுத்த ஆவியானவரின்
தன்மையையும், அதைப் பெற்றுக்கொள்ளும் வகையையும் கீழே பட்டியலிடுகிறேன்:
1-எபே. 5:18 - ஆவியினால்
நிரப்பப்படுங்கள். . .
*எப்படி*: கொலோ. 3:16 - கிறிஸ்துவின் வார்த்தை
உங்களில் வாசமாயிருப்பதாக..
2-கலா. 5:22 - விசுவாசம் என்னும் ஆவியின்
கனி
*எப்படி*: ரோமர் 10:17 - நற்செய்தியைக் கேட்பதன்
மூலம்
3-யோவான் 3:5-8 - ஆவியால் பிறக்கவேண்டும்
*எப்படி*: 1கொரி. 4:15; 1பேதுரு 1:23 - தேவ வார்த்தையான
சுவிசேஷத்தின் மூலம்
4- 2கொரி. 3:6 – ஆவி உயிர்பிக்கிறது.
*எப்படி*: யோவான் 6:63 - இயேசு சொன்ன வார்த்தைகள்
ஆவியும் ஜீவனுமாம்
5- ரோமர் 8:11 – ஆவியினாலே சாவுக்கேதுவான
சரீரம் உயிர்ப்பிக்கப்படுவது.
*எப்படி*: சங். 119:93 – தேவனுடைய கட்டளைகளால்.
6- ரோமர் 8:2 - ஆவியின் பிரமாணம்
விடுதலையாக்குகிறது.
*எப்படி*: யோவான் 8:32 – தேவ வார்த்தை
விடுதலையாக்குகிறது.
7- ரோமர் 8:14 – ஆவியினால்
வழிநடத்தப்படுவது.
*எப்படி*: சங். 119:105 – தேவ வார்த்தை கால்களுக்கு
தீபம்
8- தீத்து 3:5 - ஞானஸ்நானம் மற்றும்
ஆவியினால் மீட்பு
*எப்படி*: 1கொரி. 15:1-2 – சுவிசேஷத்தால்; யாக். 1:21 – தேவ வார்த்தை உங்கள்
ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லது; ரோமர் 1:16 – சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்பு உண்டாகும் தேவ பெலன்
9- ரோமர் 15:16; 1கொரி. 6:11 – பரிசுத்த ஆவியால்
பரிசுத்தமாக்கப்படுவது
*எப்படி*: யோ. 17:17 - சத்தியத்தால்
பரிசுத்தமாக்கப்படுகிறோம்.
10- எபி. 10:15; 1யோ. 5:6 – பரிசுத்த ஆவியானவரின்
சாட்சி
*எப்படி*: யோவான் 5:39 - வேதம் சாட்சி கூறுகிறது
11- கலா. 5:25 – ஆவிக்கேற்றப்படி
நடக்கவேண்டும்
*எப்படி*: பிலி. 3:16 – தேவனுடைய சட்டங்களின்படி
நடக்கும்போது.
12- எபே. 3:16 – ஆவியினால் உள்ளான மனுஷனில்
வல்லமையாய் பலப்படவும்.
*எப்படி*: கொலோ. 2:7 - விசுவாசத்தில்
உறுதிப்பட்டு பலப்படுவேண்டியது.
13- எபே. 2:22 – ஆவியினாலே தேவனுடைய
வாசஸ்தலமாய் கட்டப்பவேண்டும்.
*எப்படி*: அப்போஸ்தலர் 20:32 - தேவவார்த்தை உங்களைக்
கட்டியெழுப்ப வல்லது.
14- அப்போஸ்தலர் 9:31 – பரிசுத்த ஆவியின் ஆறுதல்
*எப்படி*: 1தெச. 4:18 – தேவனுடைய (இந்த)
வார்த்தைகளால் ஆறுதல்
15- 1கொரி. 6:11 - தேவஆவியால் கழுவப்படுவது
*எப்படி*: எபே. 5:26; யோவான் 15:3 – திருவசனத்தைக்கொண்டு
ஞானஸ்நானத்தின் மூலம்;
16- யோவான் 16:8 – உலகத்தைக் கண்டித்து
உணர்த்துவது
*எப்படி*: தீத்து 1:9 – தேவவார்த்தையால்
இப்படியாக ஆவியானவரின்
தன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள தேவ வார்த்தைக்கு கீழ்படியவேண்டியுள்ளது.
தேவ வார்த்தைக்கு *அப்படியே* கீழ்படியாமல் தான்தோன்றித்
தனமாக தங்களுக்கு இஷ்டமானவைகளை மாத்திரம் பற்றிக்கொண்டு தங்களுக்கேற்ப புதிய
யுக்திகளை ஆராதனையிலும் வாழ்க்கையிலும் உட்புகுத்திக்கொள்ள நமக்கு அனுமதியில்லை.
தேவ கட்டளைக்கு அப்படியே
கீழ்படிவோம்.
சத்தியத்தை முறையாய்
அறிந்த பின்னரும்;
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக