சனி, 4 பிப்ரவரி, 2023

#1174 - ஊழியருக்கும் மூப்பர்களுக்குமான பொறுப்புகளை பட்டியலிடமுடியுமா?

*#1174 - ஊழியருக்கும் மூப்பர்களுக்குமான பொறுப்புகளை பட்டியலிட முடியுமா?*

*பதில்* : சபைக்கு தலைவர் கிறிஸ்து என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எபே. 4:15

ஊழியரானாலும் மூப்பரானாலும் பிரதானமாகவும் முழுமையாகவும் கிறிஸ்துவின் கட்டளைக்கும் ஆளுகைக்கும் உட்பட்டவர்கள்.

*மூப்பர்கள்:*
சபையின் உறுப்பினர்களைக் கண்காணிப்பதும்,
அவர்கள் தேவனுடைய வார்த்தையில் போதுமான அளவிற்கு போஷிக்கப்படுவதை உறுதி செய்வதும்(1பேதுரு 5:1),
தவறான போதனையிலிருந்து பாதுகாப்பதும் (தீத்து 1:9),
சபையின் வளர்ச்சிக்கான ஊக்குவித்தலும் (எபேசியர் 4:11-16)
சபையை மேய்க்கும் அனுபவமும் (அப். 20:28)
நன்கு போதிக்க அறிந்திருக்குதலும் (1தீமோ. 3:2)
சபையாருக்கும் மற்றும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருத்தலும் (எபி. 13:7)
ஆத்துமாக்களை கவனிப்பதிலும் (எபி. 13:17)
தவறான போதனையை வசனத்தின்படியாக கண்டிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)
மூப்பர்கள் ஊழியர்களையும், சபையின் மற்ற உறுப்பினர்களையும் கண்காணிக்கிறார்கள்.
ஒரு முதலாளி போன்று, மூப்பர்கள் ஊழியர்களை நிர்வகிப்பதல்ல (ஆளுவது அல்ல) மாறாக ஊழியர்கள் வளர்ந்து கிறிஸ்துவின் போதனைகளுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.
ஒரு ஊழியர் சத்தியத்தை சரியான வகையில் போதிக்கவில்லை என்றால், அவரை மறுப்பது மூப்பர்களின் கடமை (தீத்து 1:9).

இந்த பொறுப்பு ஆண்களுக்கே உரியது. பெண்களுக்கு அனுமதியில்லை. (தீத்து 1:6)

*ஊழியர்கள் அல்லது பிரசங்கியினரின் கடமையானது:*
சபையில் உள்ளவர்களுக்கும் சபைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் (1தீமோத்தேயு 4:1-5; எபேசியர் 4:11-16).
ஊழியர் சபையில் பணிபுரியும் போது, அவர் சபையின் உறுப்பினரும் கூட.  

தவறு செய்யும் மூப்பர்களைக் கண்டிக்கும் கடமையும் ஊழியர்களுக்கு உண்டு (1தீமோத்தேயு 5:19-20).

போதனைகளைப் பற்றி ஊக்குவிக்கவும் கண்டிக்கவும் ஊழியர்களுக்கு அதிகாரம் உள்ளது (தீத்து 1:15).

இந்த கடமைகள் மூப்பர்களை விட ஊழியர்களுக்குறியது என்பதல்ல; அதற்குப் பதிலாக, கடமைகள் மூப்பர்களிடையே நட்புறவைக் கட்டுப்படுத்துகின்றன.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக