*குருத்தோலை ஞாயிறு?*
by : Eddy Joel Silsbee
எப்போதும் இராஜாவியிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
*ஃபொய்னிக்ஸ்* என்ற கிரேக்க வார்த்தைக்கு பெரிய அல்லது அறியப்படாத மரக்கிளைகள் அல்லது பேரீச்சம் இலைகள் என்று பொருள்.
மரக்கிளைகள் என்றே மாற்கு 11:8 & மத். 21:8ல் வாசிக்கிறோம்.
எருசலேமிற்குள், இம்முறை இயேசு கிறிஸ்து பவனியாக வரும்போது *கிளைகள் மட்டுமல்லாமல் வஸ்திரங்களையும் தெருக்களில் விரித்தார்கள்* – மாற்கு 11:8 & மத். 21:8.
மேலும், கிறிஸ்துவுக்காக அவர்கள் வாங்கிய கழுதையானது ஒருபோதும் *எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை* என்கிற தகவலை மாற்கு மற்றும் லூக்கா சுட்டிக்காட்டினர். இந்த தகவலை மத்தேயு தரவில்லை. மாற்கு 11:4-7, லூக்கா 19:32-35, மத்தேயு 21:4-5
இயேசு கிறிஸ்து எருசலேமை நோக்கி வந்த போது ஜனங்கள் ஆர்ப்பரித்து அவரை வரவேற்றனர் – மத். 21:4-9
பழக்கப்பட்ட கழுதையான தாய் கழுதையானது “பிரமாணத்தைக் கற்றறிந்த யூதர்களையும்“;
ஒருவரும் ஏறியிராத கழுதையானது “பிரமாணத்தை அறியாத புறஜாதியையும்” ஒப்பிடுவதாக சில வேத அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இக்கருத்தை ஆதரிக்கும் வேத வசன ஆதாரம் இல்லை!
கிறிஸ்துவின் சிலுவைக்கு பிற்காலத்தில் வாழ்ந்த சுமார் 60லிருந்து 70வருட கிறிஸ்தவர்களின் சரித்திரத்தை கொண்டுள்ள நமது வேதாகமத்தில்;
பல நாட்களுக்கு காய்ந்து போகாமல் இருக்கும் இந்த குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு எந்த சீஷர்களும், ஆதி கிறிஸ்தவர்களும் *பெரிய ஞாயிறு என்று வலம் வந்ததாக வேதத்தில் இல்லை*.
கர்த்தருடைய பந்தி என்ற ஒரு முறையைத் தவிர குருத்தோலை ஞாயிறு, பெரிய வெள்ளி, ஈஸ்டர், கிறிஸ்துமஸ் என்று எந்தப் பண்டிகையும் வேதாகமத்தில் இல்லை.
சிலுவையை ஒலையில் செய்து எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து அதை பத்திரபடுத்தி வைப்பதும், வீட்டு நிலையிலோ, வேதாகமத்திலோ பத்திரப்படுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்துவதும் *“விக்கிரக ஆராதனை”*. யாத். 20:4
விக்கிரக ஆராதனை செய்பவர்களை தேவன் வெறுக்கிறார். யாத். 30:38
வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய மரணத்தை நினைவுக்கூறாமல், உலக வழக்கத்திற்கு உடன்பட்டு தேவனுடைய வார்த்தைக்கு நாம் எதிர்த்துநிற்காமல், கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்.
அவரே இன்றும் ஆண்டுக்கொண்டிருக்கிறவர். இராஜாவின் கட்டளைக்கு செவிசாய்க்கவேண்டும். 1கொரி.15:24, அப். 2:36
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக