திங்கள், 11 ஜனவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 11 Jan 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்துரைக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஜெபம் என்பது, நமக்கு வேண்டியதை தேவனிடம் கேட்பது.
மன்றாடி வேண்டுவதாகும். ஆணையிடுவதோ, கட்டளையிடுவதோ அல்ல. நெகே. 1:4, 2 நாளா. 6:19

ஜெபத்தை கூடியிருக்கும் ஜனங்களிடத்தில் அல்ல பரலோகத்தில் இருக்கும் பிதாவினிடம் கேட்கிறோம். யோ.16:23

தேவனிடத்தில் தொடர்பில் இருக்கிறோம் என்பதை மறந்து, அவரிடம் வைக்கும் விண்ணப்பத்திற்கு பதிலாக, கூடியிருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பழக்கம் தலைதூக்கியுள்ளது.

ஜெபத்தில் மண்டியிட்டு தலைசாய்த்து இருப்பவரிடம்,
- நேரடியாக சொல்ல முடியாததை,
- கண் மூடி ஜெபத்தில் இருக்கும் மனைவியினிடத்தில் நேரடியாக சொல்லமுடியாததை கணவனும்,
- ஜெபத்தில் இருக்கும் கணவனிடத்தில் நேரடியாக சொல்லமுடியாததை மனைவியும்,
- நடந்து முடிந்த சரித்திர கதைகளையும்,

ஜெபத்தில் ஆண்டவரே, தேவனே அவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சிக்க கூடாது...

நேரடியாக சொல்ல முடியாததை, ஜெபம் என்கிற பெயரில் மற்றவருக்கு தகவல் அளிக்கும் பழக்கம் மிக மோசமானது.

பரம அப்பாவினிடத்தில் *நம் தேவையை கேட்பது* ஜெபம்.

ஜெபத்தில் கதை அடிப்பதை தவிர்த்து சரியானவற்றை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்வோம்.

ஆயக்காரனின் ஒரு வரி ஜெபம் - பூரண பதிலை பெற்றது.

ஜெபம் இரத்தின சுருக்கமாய் இருக்கட்டும். (லூக் 20:47)
கதாகலாட்சேபம் அவசியமேயில்லை. மத். 6:7

இந்த புதிய நாளை தேவன் நமக்கு நன்மையாக அமைத்து தருவாராக.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக