*ஜெபத்தில் ஆணையிடக்கூடாது-தாழ்மை அவசியம்*
by : Eddy Joel Silsbee
மாட்சிமை நிறைந்த பிதாவாகிய தேவனுடைய நாமத்திற்கு துதியும் கனமும் உண்டாவதாக.
தேவனுடைய வார்த்தையை நேரடியாக அவரிடத்திலேயே கேட்டு எப்போதும் ஜனங்களுக்கு சொல்லி வந்த ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய பிரசன்னத்தை ஆலயத்தில் பார்த்ததும் *ஐயோ* நான் அதமானேன் என்று பதறினார்.
*பயத்தோடும் பக்தியோடும்* ஆராதிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை உள்ளது. (எபி. 12:28-29)
*பயத்துடனே* கர்த்தரைச் சேவியுங்கள், *நடுக்கத்துடனே* களிகூருங்கள் என்று வசனம் எச்சரிக்கிறது (சங். 2:11)
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் *பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்* வாருங்கள் என்று அழைக்கிறது வேதம்.. (சங். 95:6)
ஆவியை உள்வாங்கிகொண்டோம் என்று சொல்லிக்கொண்டு
துளி பயமும் இல்லாமல் கூச்சலிடுவதும்
ஜனங்களிடத்தில் பேசுவதாக நினைத்து சர்வ வல்லவரிடம் துளி பயமுமின்றி ஓங்கி ஆணையிடுவதும் (ஜெபத்தில்)
வேதத்திற்கு முரணானது.
தாழ்மையுடனும் பயத்துடனும் அடக்கத்துடனும் நடப்பது அவசியம்.
*சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்ற வசனத்தை நினைவில் கொள்வோம்*. (ஏசா. 66:2)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக