*புனித வெள்ளி என்ற பெயரில் உயிரோடு இருப்பவருக்கு திதி / திவசமா?*
by : Eddy Joel Silsbee
ஜீவனுள்ள கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்துக்கள் தங்களது சாஸ்திர சம்பிரதாயப்படி இறந்து போனவர்களுக்கு ஆண்டுக்கொரு முறை அவர் இறந்த நாளில் திதி அல்லது தெவசம் பூஜை போட்டு அவரை நினைத்து தான தர்மங்கள் செய்து அன்று முழுவதும் இறந்து போனவரது நினைவலையில் இருப்பார்கள்.
நமது பாவங்களுக்காக அழுங்கள் என்று சொல்லி நமது பாவத்திற்கான மன்னிப்பை ஏற்படுத்தி தானே சிலுவையில் தனது முழு இரத்தத்தையும் சிந்தி கோர மரணம் அடைந்து மூன்றாம் நாள், தான் சொன்னபடி உயிரோடு எழுந்தும் விட்டார்.
இயேசு கிறிஸ்து, தனது கோர மரணத்தை தனது சீஷர்கள் நினைவுக்கூற வேண்டும் என்று சொன்னதை அறிந்து உணர்ந்த அப்போஸ்தலர்கள் வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) நினைவுகூர்ந்தனர். அப். 20:7
அதை பின்பற்றி கிறிஸ்தவர்கள் வாரந்தோரும் கடைபிடித்தும் வருகின்றனர்.
வேதாகமத்திற்கு சம்பந்தமேயில்லாத சாபத்தீடான மனித பழக்க வழக்கமான இடைசொறுகல்கள் கிறிஸ்தவம் என்ற பெயரில் உட்புகுந்து தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டதில் ஒன்று இந்த புனித வெள்ளி !
வருடா வருடம் தாங்கள் கொண்டாடின எந்த பண்டிகையும் உங்கள் மதத்தில் இல்லையே என்று ஏங்கி முனுமுனுத்த மக்களை சமாதானப்படுத்தும்படிக்கு ரோம் நாட்டில் புழக்கத்தில் இருந்த அநேக பண்டிகைகளை கத்தோலிக்க மதம் உட்புகுத்தி புதியதாக மதம் மாறி தங்கள் மதத்திற்குள் வந்தவர்களை தக்கவைத்துக்கொண்டது.
இஷ்டார் தெய்வத்திற்கு கொண்டாடின பண்டிகையை கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்று ஈஸ்டர் பண்டிகையை நாள் குறித்து, அதற்கு முந்தைய வெள்ளியை இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் என்று தங்கள் மதத்தினரை நம்பவைத்து வெற்றி கண்டனர்.
இந்த கதைகளை மறந்து கண்சொருகிப்போனவர்களைப்போல தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்பவர்களும் பவனி செல்வதும் புனித வெள்ளி என்ற நாளில் கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வார்த்தைகளை தியானித்து உருகி ஐயோ இறந்து போய்விட்டாரே என்று கதறி அழுவதும் பின்னர் வரும் ஞாயிறன்று வேகவைத்த முட்டையையும் முயல் குட்டியையும் கொண்டுவந்து - இயேசு உயிர்த்துவிட்டார் என்று வருடத்திற்கு ஒரு முறை கடைபிடிக்கிறார்கள்.
போன வருடம் எந்த தேதியில் குட் ஃப்ரைடே (புனித வெள்ளி) வந்தது என்றால் காலண்டரை பாராமல் எவருக்கும் சொல்லத் தெரியாது!!
இப்படிப்பட்ட எந்த பண்டிகைகளையும் ஆதி கிறிஸ்தவர் கடைபிடித்ததாக எந்த ஆதாரமும் கிடையாது !!
கிறிஸ்து பிறந்தது உண்மை.
கிறிஸ்து சிலுவையில் மரித்தது உண்மை.
மரித்து அடக்கம் பண்ணப்பட்ட கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததும் உண்மை.
இது எவருமே மறுக்க முடியாத சரித்திரம்.
புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் வெளிபடுத்தல் புத்தகம்.
அது சுமார் கி.பி 95ல் எழுதப்பட்டது.
அதாவது கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் 40 நாள் அநேகரைப் பார்த்து பின்னர் ஜனங்களின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்க பரலோகம் ஏறிப்போன வருடத்திலிருந்து சுமார் (33-95) 62 வருடங்களில் எங்கும் கிறிஸ்து பிறந்த நாளையோ ஒவ்வொரு வருடத்திலும் அவருடைய உயிர்த்தெழுந்த நாளையோ அப்போஸ்தலர்கள் அல்லது ஆதி கிறிஸ்தவர்கள் கொண்டாடினதாகவோ வேதத்தில் இல்லை !! அப். 1:3, அப். 1:9, 1கொரி. 15:5-6
தான் மரித்ததை நினைவு கூறும்படி கிறிஸ்து தாமே தன் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். அதையே கடைபிடித்தார்கள். லூக்கா 22:19
வேதத்தை பின்பற்றும்படியான கவனம் இவர்களுக்கு இருப்பதை காட்டிலும், எல்லா வருடமும் *ஈஸ்டர் தினம் எப்படியாவது ஞாயிற்றுக்கிழமையன்று வரும்படியாக* கவனமாக கணக்கிடுவார்கள்.
*எப்படி ஈஸ்டர் தினம் கணக்கிடப்படுகிறது*?
மார்ச் 21ம் தேதிக்கு பின் வரும் பவுர்ணமியை தொடர்ந்து வரும் ஞாயிறு தினத்தை ஈஸ்டர் என்று தீர்மானிக்கிறார்கள்.
ஈஸ்டர் தேதியை முடிவு செய்ததும் அதற்கு முந்திய வியாழன், வெள்ளிக்கிழமைகளை பெரிய வியாழன் பெரிய வெள்ளி என்று தீர்மானிக்கிறார்கள்.
பவுர்ணமியை வைத்து குறிக்கும் இவர்களின் கணக்கை *வேதத்தில் எப்படி தேடமுடியும்*?
இந்த பண்டிகைகளுக்கும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும் சம்பந்தமேது !! ??
கிறிஸ்துவின் மரணத்தை தானே நினைவு கூர்கிறார்கள்… கிறிஸ்தவர்கள் கடைபிடித்தால் என்ன பிரச்சனை என்றால் – கிறிஸ்தவர்களாகிய நாம் இதைக்குறித்து வேதத்தை ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏசா. 1:13-14 … நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் என்றார்.
இந்த வசனத்தில் வரும் மாதப்பிறப்புகள் என்ற வார்த்தை பவுர்ணமியை குறிப்பிடுகிறது !!
இந்த பண்டிகைகளை ஒருபோதும் கிறிஸ்தவர்களோ, அப்போஸ்தலர்களோ கடைபிடித்ததாக வேதாகமத்தில் இல்லை.
வேதத்தில் சொல்லப்படாத அல்லது அப்போஸ்தலர்கள் அங்கீகரிக்காத எதையும் நாம் செயல்படுத்துவது வேதத்திற்கு முரணானது !!
ஊர் எல்லையை காக்க ஒரு சாமி,
படிப்பு நல்லா வர்றதுக்கு ஒரு சாமி என்று ஏகப்பட்ட தெய்வங்கள் தமிழ்நாட்டில் உள்ளது போல - வசந்தகால தெய்வம் என்று கிரேக்கர்கள் கும்பிட்டு வந்த விக்கிரகம் தான் இஷ்டார்.
அந்த இஷ்டார் தெய்வத்தை வணங்கும் விக்கிரக பண்டிகை தான் ஈஸ்டர் தினமாக வலம் வருகிறது !!
தேவனை நினைத்து உருகுவதைக் காட்டிலும் உங்களது ஆத்துமா நெருப்பில் வேகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். லூக்கா 23:28
வாரந்தோறும் கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவதே வேதக்கட்டளை. அப். 20:7
வேதத்தை பின்பற்றி கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/BjCEb65x0aQ
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக