செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தவறான சாலை

*தவறான சாலை*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகர் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் கொண்டாடும் கிறிஸ்துமஸூக்கும் ஈஸ்டருக்கும் சொல்லும் வாழ்த்து போல சபை பிரசங்கங்கள் ஆகிவிடக்கூடாது.

 

நீங்க ஆசீர்வாதமா இருக்கணும், பொய் பேசக்கூடாது, திருடக்கூடாது, புகைப்பிடிக்கக்கூடாது, சாராயம் குடிக்கக்கூடாது, தவறாமல் சபைக்கு வரணும், எல்லாரிடமும் அன்பா பேசனும், தினம் வேதம் வாசிக்கணும் நல்லா ஜெபம் பண்ணனும் என்ற பொதுவான வாழ்க்கை நெறிமுறைகளையே பெரும்பாலான பிரசங்க மேடைகள் தங்கள் சபையினருக்கு தூபம் போட்டுக்கொண்டு இருப்பதால், சத்தியத்தில் வளராமல் வெதும்பின நிலை உருவாகியுள்ளது.

 

வேதாகமம் சொல்வதை பின்தொடரும்போது *கசக்கத்தான்* செய்யும்.

 

வசனம் நம்மை சீர்படுத்தும்போது *வலிக்கத்தான்* செய்யும்.

 

சரியான நேரத்தில் பிதுக்கி காயம் கட்டப்படாவிடில் சீழ்பிடித்திருப்பது வளர்ந்து அறிபிளவாகி (கேன்சர்) விடும்.

 

பிரசங்கத்தில் கண்டிப்பு இல்லையேல்;

ஏரோது - ஜனங்களிடத்தில் வேதம் பேசினது போலவும்;

பிசாசு - இயேசு கிறிஸ்துவினிடத்தில் வேதம் பேசினது போலவும் ஆகிவிடும். (அப் 12:21-22, மத் 4:6)

 

தொடர்பை துண்டிப்பது அல்ல,

மனந்திரும்புதலே அவசியம்.

 

நம் மரணம் வரையிலோ அல்லது கிறிஸ்துவின் வருகை வரையிலோ, நாம் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராதிருந்தால் அவர் நம்மை விலக்கிவிடுவார் !!

 

ஜெபத்தோடு எப்படி நாம் அநுதினமும் துவங்குகிறோமோ, அது போல நம்முடைய *ஒவ்வொரு கிரியையும் தேவ வார்த்தையின்படி மாற்ற தீர்மானிப்போம்*.

 

உணர்வுகளோடு நின்றுவிடாமல் செயல்பாட்டிலும் அதைக்காட்டுவோம். அப்போது தான் இரட்சிப்பின் பாதை துவங்கும்.

 

மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சபை என்ற தவறான சாலையில் நீங்கள் எவ்வளவு உத்தமமாய் பயணித்தாலும் ஒருபோதும் இரட்சிப்பு என்னும் ஊருக்கு உங்களைக் கொண்டு சேர்க்காது.

 

நாம் நிலைத்து நிற்கும்படி, நம்மை ஊன்றக்கட்டுபவர் அவரே! 2கொரி. 10:8, 13:10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/LXDH2AHJwWA

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக