திங்கள், 11 ஏப்ரல், 2022

#1133 - மத்தேயுவிலும் மாற்குவிலும் இரண்டு கள்ளர்களும் நிந்தித்தார்கள் என்று குறிப்பிட்டிருக்க லூக்காவில் மாத்திரம் ஒரு கள்ளன் நிந்தித்த மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது ஏன் ஐயா?

#1133 - *மத்தேயுவிலும் மாற்குவிலும் இரண்டு கள்ளர்களும் நிந்தித்தார்கள் என்று குறிப்பிட்டிருக்க லூக்காவில் மாத்திரம் ஒரு கள்ளன் நிந்தித்த மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது* ஏன் ஐயா? மத்தேயு 27:44; மாற்கு 15:32; லூக்கா 23:39-43

*பதில்* : சுவிசேஷ புத்தகங்கள் நான்கிலும் அனைத்து தகவலும் 100% கொடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கூட்டத்தாருக்கு எழுதப்பட்டது.

கூடுமானவரையிலும் அந்தந்த எழுத்தாளர் பார்வையில் அறிந்ததை அவரவரின் ஜனங்களுக்கு எழுதினார்கள்.

மத்தேயு - யூதர்களுக்கு எழுதினார்.
மாற்கு - ரோமர்களுக்கு எழுதினார்.
லூக்கா - ரோம உயர் அதிகாரிக்கு எழுதினார்.
யோவான் – புறஜாதி மற்றும் யூதர்களுக்கு எழுதினார்.

ஆகவே நான்கு புத்தகங்களையும் ஒன்றினைத்து பார்த்தால் முழுமையான தகவலை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.

நீங்கள் குறிப்பிட்ட இந்த வசனப்பகுதியில் மத்தேயுவும் மாற்குவும் குறிப்பிட்டது தவறு அல்ல. லூக்கா குறிப்பிட்டதும் முரண்பாடானது அல்ல.

இந்த இரு கள்ளருமே மறுதலித்திருக்கவேண்டும்.

கிறிஸ்து அறையப்பட்டது மூன்றாம் மணி வேளை. அதாவது நமது நேரப்படி காலை 9மணி. கள்ளனைக் குறித்து சொல்லப்பட்ட வேளை ஆறாம் மணி வேளை. அதாவது நமது நேரப்படி மதியம் 12மணி. மூன்று மணி நேரம் இடைவெளி உள்ளதை கவனிக்கவும். மாற்கு 15:25, லூக்கா 23:44.

நேரம் ஆக ஆக சிலுவையில் பேசப்பட்ட இயேசுவின் வார்த்தைகளையும் அங்கு நடந்துக்கொண்டிருப்பதையும் அறிந்து கள்ளர்களில் ஒருவன் மனந்திரும்பியிருக்கலாம் !!

மத். 27:5 மற்றும் அப். 1:18 வசனங்களைப் படித்துப்பார்த்தால் எனது விளக்கம் தெளிவாய் புரியும்!

சிலுவையில் தொங்கிக் கொண்டு உயிரை விடும் அந்த வேளையில் தனது ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ள கள்ளன் தீர்மானித்து உடனடியாகவே மனந்திரும்பினான். பரதீசிற்குள் இடம் பிடித்தான். லூக். 23:43

ஆனால், இந்நாட்களில் எத்தனை முறை வசனத்தை எடுத்துச்சொன்னாலும் ஆதாரத்துடன் வேதாகமத்தை விளக்கினாலும்;
தங்கள் பாரம்பரியத்தையும், விக்கிரகங்களையும், விபசாரத்தையும், வேசித்தனைத்தையும், கட்டுக்கதைகளையும், மனிதர்களின் போதனை என்று அறிந்தும் அதில் ஊறிப் போய் உள்ளவர்கள் மனந்திரும்ப யோசிக்கிறார்கள்.

சிலுவையில் தொங்கின கள்ளனுக்கு தனது உயிர் போகப் போகிறது என்று அறிந்தான். சொந்த ஆத்துமாவை இரட்சித்துக்கொண்டான்.

நமக்கோ அப்படியொரு கடைசி நேரம் எது என்று அறியாமல் வாழ்கிறோம். திடீரென்று உயிர் பறிப்போகும். அப்போது மனந்திரும்ப நேரம் இருக்காது. என்னைக் குறித்து தெளிவாய் வேதத்தில் சொல்லியிருந்தும் சத்தியத்தை அநேகர் சொல்லியும் நீ இங்கு வரவேண்டுமோ என்று ஐசுவரியவான் பாதாளத்தில் பார்த்து கேட்க வாய்ப்புள்ளது. கவனம் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக