புதன், 16 மார்ச், 2022

ஞாயிறு – வாரத்தின் முதல் நாள்

*ஞாயிறு – வாரத்தின் முதல் நாள்*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

மோசேயின் பிரமானத்தை கடை பிடிப்பதன் மூலம் மோட்சத்திற்கு போய் விடலாம் என்று பரிசேயரும், நியாயசாஸ்திரிகளும் நம்பியிருந்தனர்.

 

ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின்னர் வானத்திலும் பூமியிலும் *சகல அதிகாரமும் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால், கிறிஸ்துவினுடைய கட்டளைக்கு கீழ்படியாத பட்சத்தில் இரட்சிப்பு இல்லை*.. என்று தைரியமாக முழங்கின பேதுருவையும் யோவானையும் பார்த்து, படித்த மேதாவிகளுக்கே ஆச்சரியமாகிப் போனது.  (அப். 4:12-13)

 

எது உறுதியானது என்று அறிந்தால், நமது வார்த்தையிலும் அப்படிப்பட்ட அதிகாரம் ஊர்ஜிதமாய் வெளிப்படுகிறது.

 

கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ளது.

எந்த பயமுமின்றி உண்மையை தைரியமாய் எடுத்துச் சொல்வோம் !!

 

நியாயபிரமானம் அல்ல *விசுவாசபிரமாணத்திற்கே* நாம் கீழ்படிய வேண்டியது ...

 

ஆகவே,

தினந்தோறும் கூடி ஜெபிக்கலாம்,

என்றும் வேதத்தை ஆராயலாம்,

எந்த நாளிலும் தேவனை துதிப்பதிலும் தவறேதும் இல்லை. ஆனால் அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்கும்படியும் காணிக்கை கொடுக்கும்படியும் கூடினார்கள். அப். 20:7, 1கொரி. 16:1-5, மாற்கு 16:1-2

 

வெள்ளிக்கிழமையோ, ஓய்வு நாள் என்று சொல்லப்பட்ட சனிக்கிழமையோ, சொந்த இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏதாவதொரு நாளில் கூடியோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ கர்த்தருடைய பந்தியை எடுத்துக்கொண்டதாக வேதாகமத்தில் இல்லை.

 

ஆகவே, ஓய்வு நாளுக்கு அடுத்த நாளான கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் மற்றும் இராஜ்யமான சபை ஸ்தாபிக்கப்பட்ட *வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்கள் கூடுவது வேதத்தின்படி அவசியம்* !! அப். 2:1ff

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/GRA083Ak8Tk

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக