*குறையினால் கறை*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
நான் ஒரு மனுஷனைக் கண்டேன். ஒருவேளை இவர் தான் நாம் இந்நாள் வரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த இரட்சகரோ? என்று ஊருக்குள் போய் ஜனங்களை கூட்டிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாள் சமாரியா ஸ்திரீ. யோ. 4:28-29
பிரசங்கிமார்கள் இவள் தான் வேதாகமத்தில் முதல் சுவிசேஷகி என்று சிலர் சொல்வதுண்டு.
இந்த ஸ்திரீயின் வார்த்தையின் நிமித்தம் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று யோ. 4:39ல் காணமுடிகிறது...
ஆனால், இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய வேறொரு பாடமும் உண்டு.
தங்கள் கவுரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்படி சிலர் அவளிடத்தில் வந்து, “குறிப்பாக தாங்கள்” கிறிஸ்துவை *அவள் மூலமாக, அவள் சொன்னதினால் விசுவாசிக்கவில்லை* என்பதை சொல்லிக் காண்பித்து, மற்றவர்கள் முன் தங்களது நிலைப்பாட்டை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள் !! (வ42)
அவளின் பழைய வாழ்கையை நினைத்ததாலேயோ என்னவோ அவள் மூலமாக வந்த நன்மையை அங்கீகரிக்க அவர்களது மனம் ஏற்கவில்லை.
அதாவது ஒருவர் மனந்திருந்திய பின்னும்,
அவரின் பழைய காலத்தை நினைவுப்படுத்தி,
நிகழ்காலத்தின் நடக்கையை,
*குறை கூறினால் - குறை சொல்பவரின் சொந்த மனந்திரும்புதலே கேள்விக்குறியாகிறது*..
ஏற்கனவே தான் எச்சிரித்திருந்தும், பேதுரு மூன்று முறை மறுதலித்ததை, இயேசு கிறிஸ்து ஒருபோதும் பேதுருவிற்கு நினைவு படுத்தவில்லை என்பதையும் - மாறாக, தனது ஜனங்களை கவனித்துக்கொள்ளும்படியே அவரிடம் மூன்று முறை சொன்னதை நமது வாழ்க்கையில் பாடமாக கற்கவேண்டியது !! மத். 26:34, யோ. 21:15,16,17
குறைகளை மாத்திரமல்ல நிறைகளையும் கவனிக்கத் தவறக்கூடாது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக