வியாழன், 24 மார்ச், 2022

லெந்து நாட்களும் வேதாகமும் - பாகம்-2

*லெந்து நாட்களும் வேதாகமும்* பாகம்-2

by : Eddy Joel Silsbee

 

நமக்காய் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

டி.வி./கிளி ஜோசியத்தை போல சில ஆசீர்வாத வசனங்களை காலையில் படித்து ஆண்டவரே, ஸ்தோத்ரம், ஸோத்ரம், ஸோஸ்த்ரம், ஆமேன் என்று அர்த்தம் புரியாமலேயே வார்த்தைகளின் உச்சரிப்பு எது என்று தெரியாமலேயே புதிய நாளை துவங்காமல்; அநுதினமும், வசனத்தை ஒப்பிட்டு *அதற்கேற்றவாறு நம் நடக்கைகளை மாற்றி* சரியான தடத்தினுள் வந்து, இரட்சிப்பை அடைய நாம் அழைக்கப்படுகிறோம்.

 

*லெந்து நாட்களை* வேதத்துடன் ஒப்பிட்டு நேற்றைய தினத்தில் எழுதினதால் பலருக்கு மனம் வலித்தது.

 

வேதத்தின் அடிபடையில் நம்மை திருத்திக்கொள்ளும் போது, நித்திய நரகத்திற்கு தப்பிக்கலாம்..

 

நேற்று கூறியது போல இன்றும் சில குறிப்புகளை கீழே எழுதுகிறேன்:

 

1- *லெந்து நாட்களும், ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடினதாக வேதத்தில் இல்லை*.  கிறிஸ்துவின் மரணத்தை மாதம் ஒரு முறையல்ல, வாரத்தின் முதல் நாளில் நினைவுகூர்ந்தார்கள்!!  கொரோனாவை காரணமாக்கி கர்த்தருடைய பந்தியையே காலவரையின்றி தள்ளிப்போட்டு கொடுக்காமலும் எடுக்காமலும் பலர் தவறிழைத்தது நினைவில் இருக்கும். 1கொரி. 11:23-26, அப். 20:7

 

2- தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும், விவாகம் செய்யாதிருக்கவும் ஜனங்களுக்கு *பொய்யர்* கட்டளையடுவார்கள் என்று 1தீமோ. 4:2-3ல் சொன்ன காலத்தில் நாம் ருக்கிறோம்.

 

3- மனுஷருடைய கற்பனைகளையும் பாரம்பரியங்களையும் கடைபிடித்து தேவனுடைய சமூகத்தில் வருவது *பாவம்* என்று கிறிஸ்து சொல்கிறார். மத். 15:8-9

 

4- லெந்து நாட்களில் தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்ற நாட்களில் பாவ வாழ்க்கை வாழ வேதாகமம் இடம் கொடுக்கிறதோ? நாம் எல்லா நாளும் பரிசுத்தமாய் வாழ தேவகுமாரன் தன் ஜீவனை கொடுத்தாரே !! 1யோ. 3:4-8

 

1யோவான் 3:7 ... நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

 

1யோவான் 3:18-20 ... வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.  நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

 

சிந்திப்போம், சீர்படுவோம்.

தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்வோம்.

 

உலகத்தோடு ஒத்து ஊதி நித்திய வாழ்வை இழக்காமல்;

வேதத்தைப் பற்றிக்கொண்டு பரலோகத்திற்குள் செல்வோம்.

 

தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/3z2oQPSbYLc

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக