புதன், 16 மார்ச், 2022

#1129 – பிலாத்து கலிலேயருடைய இரத்தத்தை ஏன் பலிகளில் கலக்கவேண்டும்? விளக்கவும்

#1129 – *பிலாத்து கலிலேயருடைய இரத்தத்தை ஏன் பலிகளில் கலக்கவேண்டும்? விளக்கவும்*.

*பதில்* கலிலேயர்கள் ஏரோதினுடைய அதிகாரத்திற்குட்பட்டிருந்தார்கள். மாற்கு 6:21; லூக். 3:1 மற்றும் பிலாத்து யூதேயாவின் அதிபதி. மத். 27:2

பிலாத்துவிற்கும் ஏரோதிற்கும் விரோதம் இருந்தது. லூக்கா 23:12

கலிலேயர்கள் எருசலேமில் பலியிட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது பிலாத்து திடீரென்று வந்து அவர்களைக் கொன்று போட்டார்.

மேலும் அப்போது கொல்லப்பட்ட "கலிலேயரின்" இரத்தம் அவர்கள் பலியிடுவதற்காகக் கொன்ற விலங்குகளின் இரத்தத்துடன் கலந்தது.

பிலாத்து அவர்களைக் கொன்று இரத்தத்தை பலியிட்டார் என்று அர்த்தமல்ல.  

இங்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பைத் தவிர வேறு எங்கும் இதைக் குறித்த தகவல் இல்லை.

குறிப்பு : ஃபிளேவியஸ் ஜோசபஸ் என்ற ஜோசப் பென் மத்தியாஸ், (கி.பி 37 அல்லது 38 ஆம் ஆண்டுகளில் எருசலேமில் பிறந்து கி.பி 100 இல் ரோமில் காலமானவர்). ஒரு யூத ஆசாரியர், அறிஞர் மற்றும் வரலாற்றாசிரியர் 66-70 யூத கிளர்ச்சி மற்றும் முந்தைய யூத வரலாற்றில் மதிப்புமிக்க படைப்புகளை எழுதியவர்.

இவரது கூற்றுப்படி, கலிலேயர்கள் மிகவும் துன்மார்க்கர்கள் என்பதையும், அவர்கள் இறைச்சி மற்றும் தேசத்துரோகங்களுக்கு மிகவும் விருப்பமுள்ளவர்கள் என்பது.

கலிலேயர்கள் எருசலேம் ஆலயத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போது பிலாத்து அவர்கள் மீது திடீரென்று வந்து அவர்களைக் கொன்றதன் மூலம் தனது எதிர்ப்பை ஏரோதுவிற்கு காட்டியிருக்கலாம்.

இயேசு கிறிஸ்துவினிடம் இந்த தகவலை சொன்னபிற்பாடு (லூக்கா 13:1) அவர்களுக்கு இயேசு கிறிஸ்து சொன்ன பதில் இந்த கூற்றை உறுதிப்படுத்துவதைக் காணலாம்:

லூக். 13:2-3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக