#1128 - *கிழக்கிலே இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு காணப்பட்ட நட்சத்திரம் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவருடையது தான் என்று எப்படி தெரிந்தது?* அந்த நட்சத்திரத்தை எப்படி அடையாளம் கண்டு கொண்டனர்? விளக்கவும்.
*பதில்* :
இரண்டு வேத வல்லுநர்களின் கருத்துக்களினின்று எடுக்கப்பட்ட சாரம்சத்தின் கூற்றுகளைப் பதிவிடுகிறேன்.
*கருத்து #1*
பழங்காலங்களில் புதிய நட்சத்திரம் அல்லது வால் நட்சத்திரத்தின் தோற்றம் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் சகுனமாகக் கருதப்பட்டது. புகழ்பெற்ற மனிதர்களின் பிறப்பு அல்லது இறப்பு போன்ற பல தோற்றங்கள் ரோமானிய வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜூலியஸ் சீசரின் மரணத்தின் போது ஒரு வால் நட்சத்திரம் வானத்தில் தோன்றி ஏழு நாட்கள் பிரகாசித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஞானிகள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இளவரசர் பிறந்தார் என்பதற்கு இது ஒரு சான்றாகவும் கருதினர்.
எண். 24:17ல், பிலேயாம் உரைத்த தீர்க்கதரிசனம், , "யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" போன்றவற்றின் மூலம் அவர்கள் இந்த நம்பிக்கைக்கு வழிநடத்தப்பட்டிருக்கலாம்.
இந்த நட்சத்திரம் என்னவென்று தெரியவில்லை. அதைப் பற்றி பல யூகங்கள் உள்ளன. ஆனால் அது பற்றி எதுவும் வேதத்தில் விளக்கப்பட்டிருக்கவில்லை.
ஒரு நட்சத்திரம் என்று பொதுவாகக் குறிப்பிடுவது நாம் நினைக்கக்கூடாது.
நட்சத்திரங்கள் வானத்தில் நிலைத்திருக்கும் பரந்த கோல்கள். அவற்றில் ஒன்று ஞானிகளை வழிநடத்த அனுப்பப்பட்டது என்று கருதுவது அபத்தமானது.
இது ஒரு ஒளிரும் தோற்றம் அல்லது விண்கற்கள், சில சமயங்களில் வானத்திலிருந்து விழுவதை நாம் காண்கிறோம். அதை அந்த சாஸ்திரிகள் பார்த்திருக்கலாம். அது அவர்களை எருசலேமுக்கு போகும்படியாக வழிநடத்தியதாக கணக்கு செய்திருக்கலாம். லூக்கா 2:9
*கருத்து #2*
நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் வகைகள் மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பது ஒரு நம்பிக்கை.
நட்சத்திர பலன்களை பின்பற்றுவது பைபிளில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. (ஏசா. 47:13).
நட்சத்திரங்களைப் படித்து அறிபவர்களுக்கு தகவல் சொல்லும் குறிப்பாக கடவுள் வானத்தில் ஒரு அடையாளத்தை வைப்பதிலிருந்து இது வேறுபட்டது.
உதாரணமாக, எசேக்கியாவின் ஜெபம் கேட்கப்பட்டது என்பதை நிரூபிக்க, கடவுள் சூரியனை நகர்த்தினார். ஏசா. 38:8
சூரியனின் நகர்வு எசேக்கியாவின் வாழ்க்கையை பாதிக்கவில்லை. ஆனால், எசேக்கியாவுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்க கடவுள் வானத்தைப் பயன்படுத்தினார்.
சாஸ்திரிகள், "யூதர்களுக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே? கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்" (மத்தேயு 2:2) என்று கூறினார்கள்.
யூதர்களின் ராஜா பிறந்தார் என்ற உண்மையை அறிவித்த ஒரு அடையாளத்தை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படி அந்த நம்பிக்கைக்கு வந்தார்கள் என்ற பதிவு வேதத்தில் இல்லை.
கடவுள் ஏதோ ஒரு வகையில் இதற்குப் பின்னால் இருந்தார் என்பதும், இயேசுவின் பிறப்பு சாதாரணமானது அல்ல என்பதற்கான ஆதாரத்தை அளித்தது என்பதும் நமக்குத் தெரியும்.
"அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்." (எண். 24:17).
மேசியாவின் பிறப்பை அறிவிக்க புறஜாதிகள் உதவுவார்கள் என்றும் வேதம் குறிப்பிடுகிறது. ஏசாயா 60:3
தானியேல் மற்றும் இஸ்ரவேலர்களின் சிறைப்பிடிக்கப்பட்ட காலத்திலிருந்து சொல்லப்பட்டதாக இருக்கலாம். மேதியர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த இடத்திலிருந்து (கிழக்கு) சாஸ்திரிகள் வந்ததாக தெரிகிறது.
சாஸ்திரிகள் பின்பற்றி வந்தது சாதாரண நட்சத்திரம் அல்ல. இவர்கள் எருசலேமை விட்டு வெளியேறியபோது, கிழக்கிலே கண்ட நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் செல்வதாக பார்க்கிறோம் (மத்தேயு 2:9).
ஒப்பீட்டளவில் நட்சத்திரங்கள் நிலையான பொருள்கள். அவை பொதுவாக அசைவதாகத் தெரியவில்லை. ஆனாலும் இங்கு அவர்கள் பெத்லகேமுக்குள் நுழைந்தபோது அது ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு மேலே தோன்றியது என்று காண்கிறோம்.
இரவில் நீங்கள் உங்கள் வீட்டு மாடியிலிருந்து வானத்தில் நேராக பார்க்கும் நட்சத்திரங்களைப் உங்கள் அண்டை வீட்டிலிருந்து கண்டால் அது வேறுபடுவதாக சொல்ல இயலுமா? உண்மையில் என்னவென்றால் இந்த நட்சத்திரத்தின் பின்னால் தேவனுடைய வழிநடத்துதல் இருந்தது.
நாம் பரலோகம் செல்வதற்கு சத்தியம் போதுமானதாகையால் (யோ. 20:31, 2தீமோ. 3:16-17) மனிதகுலத்திற்கென்று பரலோகத்தில் தோன்றிய ஒரு அடையாளத்தை உலக மக்களுக்கான வெளிப்படுத்தலாக வந்தவை. மாறாக நட்சத்திரங்களுக்கு பின்னாக நாம் எந்த குறிப்பையும் வாழ்க்கைக்கென்று எடுத்துக்கொள்ள இது வரையறுக்காது.
*குறிப்பு* : நாம் கிறிஸ்துமஸ் விளம்பர அட்டைகளில் காணும் 3 சாஸ்திரிகள், குழந்தை, ஆடு மாடுகள் மற்றும் மேய்ப்பர்கள் ஒன்றாக மாட்டுக்கொட்டிலில் இருப்பது கற்பனையான படம். மேய்ப்பர்கள் வந்து குழந்தையைக் கண்டது பிறந்த அன்றைய தினத்தில். சாஸ்திரிகள் வந்துக் குழந்தையைக் கண்டது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில். கிறிஸ்து பிறந்த அன்றே இந்த சாஸ்திரிகள் குழந்தையைக் காணவரவில்லை !! மத். 2:11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக