*நம்மை ஆசீர்வதிப்பதே ஆண்டவருக்கு பிரியம்*
by : Eddy Joel Silsbee
நியாயாதிபதியாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சோதனை எவருக்கும் வரும். நல்லவர் கெட்டவர் என்று பாரபட்சம் பார்ப்பது இல்லை. 1பேதுரு 1:17
வித்தியாசம் என்னவென்றால் கர்த்தரை பின்பற்றுவோர் சோதனையிலிருந்து வெளியே வரத்தக்கதாக தேவனே உதவி செய்கிறார். 2கொரி. 1:10
எல்லா இக்கட்டுகளிலும் அவரே விலக்கி காப்பார். யோபு 5:19
நம்முடைய திராணிக்கும் எல்லைக்கும் உட்பட்டே நாம் சோதிக்கப்படுவோம். 1கொரி. 10:13
பக்தியோடு இருக்கும் போது, அவர் எப்போதும் கைவிடார்.. (சங் 4:3)
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க… அறிந்திருக்கிறார். 2பேதுரு 2:9, தானி. 3:17, யாத். 3:17
அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, நாம் மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளவர்களாக்குகிறார். தீத்து 2:14
தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களாக ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், நம்மில் இருக்கும் களிம்பை நீக்கும்படிக்கு தேவனே நமக்கு உதவிசெய்து, தன்மையாய் பொறுமையாய் நம்மை சுத்திகரித்து தன்னுடையவர்களாய் இருந்து அவருக்கு மகிமையாய் வாழச்செய்கிறவர். மல்கியா 3:3
தேவனுடைய ஆசீர்வாதமும் கிருபையையும் நமது வாழ்வில் பெறவேண்டுமெனில், அவரை அண்டிக்கொள்ள வரும் எந்த ஜனத்தையும் அவர் ஜலத்தினால் சுத்திகரிக்கிறார் !!
நம்மிலுள்ள சகல அசுத்தங்களை களைகிறார் !! எசே. 36:25
அவருடைய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம் .. அவர் நம்மை ஆசீர்வதிப்பதே பிரியமுள்ளவர் !! எண். 24:1
அவருடைய வார்த்தைக்கு கீழ்படிதல்…. ஆசீர்வாதத்தைப் ஈட்டுகிறது !! உபா. 11:27-28, அப். 22:16
ஜெயங்கொள்கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்வான் !! வெளி. 21:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Had0jMpbhw0
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக