வியாழன், 28 நவம்பர், 2019

#629 *கேள்வி* காதல் திருமணம் செய்து கொள்வது வேதத்தின்‌ படி அது சரியா இல்லை என்றால் தவறா ?

#629  *கேள்வி*  காதல் திருமணம் செய்து கொள்வது வேதத்தின்‌ படி அது சரியா இல்லை என்றால் தவறா ?

*பதில்*
ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள், சமீப காலம் வரை, இந்திய கலாச்சாரத்தில் வழக்கமாக இருந்தன.

இந்த கலாச்சாரம் நமக்கு பழமைவாதமாக கருதப்பட்டாலும், விவாகரத்து விகிதம் மிகவும் குறைவாகவும், குடும்ப உறவுகள் இங்கு மிகவும் வலுவாகவும் உள்ளன.
 
ஆனால் இப்போது காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கு கலாச்சாரத்தில் எழுதப்பட்டது வேதம். அதில் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

தகப்பனாகிய தேவன் தன் குமாரனான ஆதாமுக்கு ஏவாளை அறிமுகம் செய்து வைத்தார் -  ஆதி. 2:22.

ஆபிரகாம் தனது மகன்க்கிற்கான மணப்பெண்னை தேட ஆரம்பித்தார் - ஆதி. 24: 1-4.

யாக்கோபு - காதல் திருமணத்திற்கு வித்திட்டார் - ஆதி. 29: 18-20.

பெற்றோர்கள் திருமணங்களை ஏற்பாடு செய்யும்போது, ​​அவர்களின் ஞானம் மற்றும் அவர்கள் இணைக்கப்பட்டிருக்கும் ஆண்டுகளின் அனுபவம் மிகப்பெரிய நன்மையை அளிக்கும்.

தற்போது சரியானதாக தோன்றுபவை பிற்காலங்களில் எது மோசமாக மாறவாய்ப்புள்ளது என்பதை பெற்றோர் தங்கள் சொந்த அனுபவத்தில் அறிந்தவர்கள். ஆகவே தன் பிள்ளைகளின் துணையை தேர்ந்தெடுக்கும் போது அப்படிப்பட்ட தவறான சம்பவம் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஏதுவாகிறது.

திருமணமான வயதில் ஒரு மகன் அல்லது மகள் தங்கள் துணைவரை தேர்ந்தெடுக்க எந்த தடையும் இல்லாத போதும் பெற்றோரின் கவனத்திற்கு தங்கள் தெரிந்தெடுத்தலை கொண்டு வந்து அவர்களோடு கலந்தாலோசிப்பது பிற்கால தவறுகள் நிகழாமல் இருக்கும். சொந்த துணைவரை திருமணம் செய்து கொள்வதோடு வாழ்க்கை முடிந்து விடுவதல்ல. அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பெற்றோர் மற்றவர் பெற்றோரை காண வேண்டும் இரண்டு குடும்பங்களும் ஒன்றாய் சேர்ந்து சந்தோஷிக்க வேண்டும். இரண்டு குடும்பங்களுக்கும் அவரவர் சமுதாயத்தில் நன்மதிப்பும் கணமும் இருப்பதை நினைவில் கொண்டு அவர்களுக்கு தலைகுணிவு வராமல் பார்த்து கொள்ள வேண்டுமே? பல பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எடுக்கும் முடிவில் சம்மதம் இல்லாமல் சமுதாயத்தில் தங்கள் நற்பெயரை உணர்ந்து வெளியே செல்ல யோசித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டே !!

ஆகவே காதல் திருமணம் தவறு என்று வேதத்தின்படி சொல்வதற்கல்ல என்றாலும் அதன் பின் விளைவுகளை அதிக கவணம் செலுத்துவது மிகவும் அவசியம். எந்த செயலுக்கும் அந்த இருவரும் முழு பொறுப்பாளராக இருக்க வேண்டும். சொந்தாக தங்கள் துணைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தை வேதம் தெளிவாக சொல்கிறது - 1 கொரி. 7:39; எண். 36: 6.

காதலில் விழுவது பாவம் அல்ல. ஆனால் முதல் பார்வையிலேயே காதல் ஏற்படுவது ஆபத்தானது. அது வெளியரங்கமான கவர்ச்சியின் அடிப்படையில் வருவதாகும்.

துணைவரை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமும் நேரமும் தேவை. சம்மதம் தெரிவிப்பதற்கு முன் பெற்றோர், நம்பகமான பெரியவர்கள் மற்றும் மூத்த கிறிஸ்தவர்களிடத்தில் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

உங்கள் உள்ளத்தின் தீர்மானத்தை தேவனிடம் ஒப்படைத்து காத்திருங்கள்.

நீங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்தால், உறுதிப்படுத்தல்களுடன் தேவன் உங்களை வழிநடத்துவார்.

ஏதேனும் வேறு காரணங்களினால் பெற்றோர் ஒப்புக் கொள்ள மறுத்தால் பெற்றோரை சமரசம் செய்ய முயற்சி எடுத்து இரண்டு வீட்டார் சம்பந்தத்தோடு தங்கள் துணைவரை கரம் பிடியுங்கள். பெற்றோர் சம்மதம் அவசியம் எபி. 13:17

திருமணம் இரண்டு நபர்களை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் ஒன்றாக இணைக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும்.

சில முக்கிய நகரங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, கிட்டத்தட்ட 80% இளைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆலோசனையில்லாத அவசர திருமணம் ஆபத்து !
 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக