வியாழன், 10 மார்ச், 2022

உலக மக்களின் விளம்பரம் கிறிஸ்தவனுக்கு அவசியமில்லை

*உலக மக்களின் விளம்பரம் கிறிஸ்தவனுக்கு அவசியமில்லை*

by : Eddy Joel Silsbee

 

உன்னதமான தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

குரலுக்காக, இனிமைக்காக, அழகிற்காக, நேர்த்திக்காக;

தனது பாடலோ, தனது புத்தகமோ, தனது நிகழ்ச்சியோ பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில்;

கிறிஸ்தவரல்லாதவரையும், பிரபலமானவர்களையும், சினிமாக்காரர்களையும் வைத்து விளம்பரப்படுத்துகின்றனர்

அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை !!

 

தமிழகத்தில் மிகப்பிரபலமானவரின் முகவுரையை வாங்கித் தருவதாகவும் அதை நமது *Q&A வேதாகம கேள்வி பதில்* புத்தகத்தில் பதிவிட்டால் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகும் என்றும் ஒரு முக்கியப்புள்ளி என்னை அணுகினார்.

 

பணம் அல்ல சத்தியத்தில் உள்ளவர்களே முக்கியம் என்று நான் மறுத்து; சத்தியத்தில் நிலைத்திருக்கும் இரண்டு ஊழியர்களை என் புத்தகத்திற்கு முன்னோட்டமும் கருத்துரையும் எழுத வேண்டிக் கொண்டேன். ஒருவர் எனது தகப்பனார் காலத்தின் *ஊழியர் சகோ.பிரேம்ராஜ் மற்றவர் எனது வயதிலுள்ள சகோ.இளையராஜா* அவர்கள்.

 

ரோமருக்கு எழுதின நிருபத்தை பவுல்;

தெர்தியு என்னும் *கிறிஸ்தவனைக் கொண்டு* எழுதினார் என்பது நமக்குப் பாடம் !!

 

இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் *கர்த்தருக்குள்* உங்களை வாழ்த்துகிறேன் என்றார். ரோ. 16:22

 

நாம் எதை செய்தாலும் கிறிஸ்துவே அதில் மகிமைப்பட வேண்டும்.

 

சுய பெயர் பிரஸ்தாபத்திற்காக ஓடாமல் கிறிஸ்துவையே முன்னிறுத்துவோம்.

 

அனைவரையும் விழுங்கும் மரணத்தையே ஜெயம் பெற்றவரல்லவா நமது இயேசு கிறிஸ்து … அவரை உண்மையாய்ப் பற்றிக்கொண்டால், நம்மையும் வெற்றியடையச் செய்வார். !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/vTPtT220Zf0

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக