திங்கள், 29 நவம்பர், 2021

நம்மை பராமரித்து ஆதரிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

*நம்மை பராமரித்து ஆதரிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து*

By : Eddy Joel Silsbee

 

நம்மை நேசிக்கும் பரம நேசர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எப்போதும் தேவனையே நாம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே நம் பரம பிதாவின் நோக்கமாய் இருக்கிறது.

 

எவ்வளவு தூரம் போனாலும், நாம் அவரைத் தேடுகிறோமா என்பதை பார்க்க அவர் நம்மையே கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்.

 

நம் மீது அவர் வைத்த அன்பின் நிமித்தம்,

அவரை நாம் தேடாவிட்டாலும்,

அவர் நம்மை கை விடுவதில்லை.

 

அவர் பொறுமையாய் அமர்ந்திருந்து,

ஒரு பயிரானது,

மென்மையாய்,

காந்தியுள்ள வெயிலில் படும் அளவிற்கும்,

அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் பத்திரமாய் நம்மை பராமரிக்கிறவர். ஏசா. 18:4

 

அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து,

மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார். 2சாமு. 23:4

 

ஆகவே, பூலோகத்திலும் பரலோகத்திலும் சகல அதிகாரத்தையும்  கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை மாத்திரம் சார்ந்து இருந்தால்  இன்னும் மேலான நன்மையுண்டு !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/-TVWJGK_RWo

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக