வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தொழிலாளர்களுக்காய் ஜெபிப்போம்

*தொழிலாளர்களுக்காய் ஜெபிப்போம்*

by : Eddy Joel Silsbee

 

உன்னதமான தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஜீவனையும் சுவாசத்தையும் தேவனே கொடுக்கிறார்.

 

அவரிடத்திலிருந்து பெற்ற ஜீவன் (ஆவி) நம் சரீரத்தில் இருக்கும் வரை அவருக்கென்று உழைக்க கடமைப் பெற்று இருக்கிறோம். 

 

பிரச்சனைகளும், போராட்டங்களும், எதிர்ப்புகளும், வியாதிகளும், கொள்ளை நோய்களும் நமக்கு ந்தாலும்; நாம் படும் பிரயாசத்தின் பலன் அவரிடத்திலிருந்து நமக்கு நிச்சயம் வரும்.

 

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காய் ஜெபிக்கிறோம்.

 

வியாதியஸ்தர்களுக்காய், உறவினர்களுக்காய், ஊழியர்களுக்காய், சபையாருக்காய் அரசாங்கத்திற்காய் அதிகாரிகளுக்காய் வழக்கமாக ஜெபிப்போம்.

 

ஆனால், மருத்துவமனைகளிலும் காவல் துறையிலும் நகராட்சியிலும் வேலை செய்பவர்களுக்காக குறிப்பாய் துப்புரவு தொழிலாளர்களுக்காகவும் ஜெபிக்கத் தவற வேண்டாம்.

 

நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றறிந்தும் சேவை செய்யும்படி தங்கள் குடும்பத்தையும், தங்களையும் பொருட்படுத்தாமல் நேரம் காலமின்றி மக்கள் சேவையில் மக்களுக்கு மனமுவந்து எப்போதும் வேலைசெய்யும் தேவஊழியர்கள் அவர்கள். ரோமர் 13:4

 

நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ஓசியா 10:12

 

ஜெபத்தில் அவர்களையும் தாங்குவோம். தேவன் அதற்கான பலனை நமக்கும் தருகிறவர்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/uKVPUW380QM

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக