சனி, 5 பிப்ரவரி, 2022

யேகோவா-சிட்கேனு

*யேகோவா-சிட்கேனு*

by : Eddy Joel Silsbee

 

நீதியின் தேவனின் நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக.

 

தேவனுடைய தன்மையை எபிரேய வார்த்தைகளைக் கொண்டு அழைக்கப்படும் தேவனுடைய நாமங்களை பார்த்து வருகிறோம்.

 

இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா-சிட்கேனு*

 

ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' tsid-kay'-noo

தமிழ் வார்த்தை/அர்த்தம் : நீதியாயிருக்கிற கர்த்தர்

 

மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே  தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.

 

இரண்டு முறை பழைய ஏற்பாட்டில் நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை இரண்டுமே ஏரேமியா புஸ்தகத்திலேயே காண முடிகிறது. எரே 23:633:16

 

Tsedek (tseh'-dek), இதில் இருந்து Tsidkenu பெறப்பட்டது, ஹீப்ருவில் "கடுமையாக இருப்பது", "நேராக இருப்பது" அல்லது "நீதிமான்" என்று பொருள்.

                                                                                                                       

யேகோவா என்ற வார்த்தையும் இதோடு இணைந்தால் - யேகோவா சிட்கேனு என்பதை *"நம்முடைய நீதியாகிய கர்த்தர்"* என்று மொழிபெயர்க்கலாம்.

 

செதெக் என்ற வார்த்தையின் அடிப்படையில் மற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்ட வேத குறிப்புகள் : ஆதி. 15:6; சங். 4:1; 5:8; 24:5; 31:1; 36:10; 71:15; 89:16; மத். 6:33; ரோ. 4:22; 5:18; 8:10; 10:4; 1கொரி. 1:30; 2கொரி. 5:21; பிலி. 3:9

 

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏசா 55:6

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/QhgfXajkEVg

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக