வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

யேகோவா-ஷம்மா

*யேகோவா-ஷம்மா*

by : Eddy Joel Silsbee

 

ஜீவனுள்ள தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

தேவனுடைய தன்மையை எபிரேய வார்த்தைகளைக் கொண்டு அழைக்கப்படும் தேவனுடைய நாமங்களை பார்த்து வருகிறோம்.

 

இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா-ஷம்மா*

 

தமிழ் வார்த்தை/அர்த்தம் : இருக்கிறவர் / எப்போதும் உயிருள்ளவர் / ஜீவனுள்ளவர்

 

ஷம்மா என்பது எபிரேய வார்த்தையான ஷாம் என்பதிலிருந்து உருவானது. இதை "அங்கே" என்று மொழிபெயர்க்கலாம்.

 

யெகோவா-ஷம்மா என்பது பூமிக்குரிய ருசலேமின் அடையாளப் பெயர்.

 

தேவன் எருசலேமை கைவிடவில்லை. அதன் இடர்பாடுகளில் விட்டுவிடவில்லை, ஆனால் ஒரு மறுசீரமைப்பு இருக்கும் என்று இது குறிக்கிறது.

 

ஆங்கில வேதாகமத்தில் கூட பார்க்க முடியாதபடிக்கு இந்த வார்த்தை மொழி பெயர்கப்படாமல் ஒரே ஒரு முறை தமிழ் வேதாகமத்தில் எசே. 48:35ல் கிடைக்கபெற்று இருக்கிறோம் !!

 

மற்ற இடங்களில் தமிழ் அர்த்தமுடன் வரும் வேத குறிப்புகள் : ஆதி. 28:15; சங். 23:4; 46:1; 139:7-12; எரே.  23:23-24; ஆமோஸ் 5:14; மத். 18:20; 28:20; யோ. 14:16-17; அப். 7:48-49; 17:24-28

 

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங். 23:4

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/PQZg8VrC9Dw

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக