*யேகோவா- ராஃபா*
by : Eddy Joel Silsbee
வியாதியிலிருந்து சுகம் தரும் வல்லமையுள்ள கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவனுடைய தன்மையை எபிரேய வார்த்தைகளைக் கொண்டு அழைக்கப்படும் தேவனுடைய நாமங்களை பார்த்து வருகிறோம்.
இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ராஃபா*
ஆங்கிலத்தில் : yehhovaw' raw-faw'
தமிழ் வார்த்தை/அர்த்தம் : குணப்படுத்தும் தேவன் / பரிகாரியாகிய கர்த்தர்
மொழி பெயர்க்கப்பட்டதால் இந்த எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.
யேகோவா என்னும் எபிரேய வார்த்தைக்கு "இருப்பவர்" அல்லது "கர்த்தர் / இறைவன்" என்பது தமிழ்.
ராஃபா என்றால் எபிரேய மொழியில் "மீட்டெடுப்பது", "குணப்படுத்துவது" அல்லது "ஆரோக்கியமாக்குவது" என்று பொருள்.
இரண்டு வார்த்தைகளும் இணைந்தால் – யெகோவா-ரஃபா - அதை "குணப்படுத்தும் யெகோவா" என்று மொழிபெயர்க்கலாம். (எரே. 30:17; 3:22; ஏசா. 30:26; 61:1; சங். 103:3).
யெகோவா தம் மக்களின் உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவர்.
வேத குறிப்புகள் : யாத் 15:26; 2நாளா 7:14; சங் 6:2; 41:4; 103:3; 147:3; ஏசா 19:22; 30:26; 57:18-19; எரே 3:22; 17:14; 30:17; மத் 8:7; 10:1; லூக் 4:18
நமது பாவங்களுக்காக அவர் மரித்து, நாம் நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். 1பேதுரு 2:24
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/5izHX3bKq_E
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக