செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

யேகோவா நிசி

*யேகோவா நிசி*

by : Eddy Joel Silsbee

 

அற்புதத்தின் தேவனின் நாமமே மகிமைப்படுவதாக.

 

தன்மையின் அடிப்படையில் தேவனுடைய நாமங்களை பார்த்து வருகிறோம்.

 

*குறிப்பு* : இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. இவைகள் அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா நிசி*

 

தமிழ் வார்த்தை/அர்த்தம் : தேவனாகிய கர்த்தரே எனக்கு அடையாளம் அல்லது கொடி / அற்புதத்தின் தேவன்.

 

“யேகோவா நிசி” என்கிற எபிரேய வார்த்தை மொழிப் பெயர்க்கப்படாமலேயே தமிழ் வேதாகமத்தில் ஒரே ஒரு முறையும் எபிரேயத்திலும் ஒரே ஒரு முறையேயும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அது யாத். 17:15ல் காணலாம்.

 

யேகோவா என்னும் எபிரேய வார்த்தைக்கு "இருப்பவர்" அல்லது "கர்த்தர் / இறைவன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

இது ஹவா என்ற எபிரேய வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது "இருப்பது" அல்லது "இருந்துக்கொண்டிருப்பது" என்பதாகும்.

 

இந்த வார்த்தை குறிப்பாக "அறியப்பட" பரிந்துரைக்கிறது. இது இடைவிடாமல் தன்னை வெளிப்படுத்தும் கடவுளைக் குறிக்கிறது.

 

Nes (nês) என்ற வார்த்தையிலிருந்து நிசி வருகிறது. எபிரேயத்தில் "பேனர்" என்று பொருள். அதாவது பதாகை என்று தமிழில் நாம் அழைக்கிறோம். யாத். 17:15 இல், மோசே, கர்த்தர் இஸ்ரவேலின் பதாகையின் கீழ் அமலேக்கியர்களை தோற்கடித்தார் என்பதை உணர்ந்து, யேகோவா-நிசி (எங்கள் கொடியின் கர்த்தர்) என்ற பலிபீடத்தை கட்டுகிறார்.

 

நெஸ் சில சமயங்களில் ஒரு சின்னத்துடன் இணைக்கப்பட்ட துருவமாக மொழிபெயர்க்கப்படுகிறது. போரில் எதிர்க்கும் நாடுகள் தங்களுக்குரிய ஒவ்வொரு முன் வரிசையிலும் தங்கள் சொந்தக் கொடியை ஒரு கம்பத்தில் பறக்கவிடுவார்கள்.

 

இது அவர்களின் வீரர்களுக்கு நம்பிக்கையின் உணர்வையும் மையப்புள்ளியையும் தருவதாக இருந்தது. நம்பிக்கையையும் மையப் புள்ளியையும் அளிக்க ஊக்கமளிக்கும் ஒரு பதாகையைப் போன்றது.

 

எத்தனை பேர் விரோதமாய் வந்தாலும் தேவன் நம்மை வெண்கல அலங்கமாக்கி நம்மை தப்புவிப்பார். (எரே. 15:20)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/MNRruy0RQJQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக