*யா-வே / கர்த்தர் / யேகோவா*
by : Eddy Joel Silsbee
அன்பின் தேவன் தாமே நம்மை ஆதரிப்பாராக.
தேவனுடைய தன்மையின் அடிப்படையில் அவர் அழைக்கப்படும் பெயர்களை பார்த்து வருகிறோம்.
*குறிப்பு* : இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல – மாறாக இவைகள் அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா*
தமிழ் வார்த்தை/அர்த்தம் : தேவனாகிய கர்த்தர் / எங்கும் நிறைந்து இருக்கும் கடவுள் / முழுமையான ஆட்சியாளர்.
யேகோவா என்பது தேவனின் வாக்களிக்கப்பட்ட பெயர். (யூத பாரம்பரியத்தின்படி) உச்சரிப்பிற்கு மிகவும் பரிசுத்தமான இந்த நாமம், உண்மையில் உயிரெழுத்துக்கள் இல்லாமல் ஆங்கிலத்தில் YHWH என்றும் தமிழில் யேகோவா என்றும் உச்சரிக்கப்படுகிறது.
ஆங்கில எழுத்துக்களில் YHWH Tetragrammaton (டெட்ராகிராமட்டன்) என்று குறிப்பிடப்படுகிறது. (இது "நான்கு எழுத்துக்கள்" என்று பொருள்படும்).
YHWH எபிரேய எழுத்துக்களில் இருந்து வந்தது: Yud, Hay, Vav, Hay.
ஆதியாகமம் 2 இல் YHWH முதன்முதலில் பயன்படுத்தப்பட்டாலும், யாத்திராகமம் 3 (யாத். 3:14) வரை தேவன் தன்னை YHWH ஆக வெளிப்படுத்தவில்லை.
பலர் YHWH ஐ "யாஹ்வே" அல்லது "யேகோவா" என்று உச்சரிக்கின்றனர். கி.பி மூன்றாம் நூற்றாண்டில், யூத மக்கள் "உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்காயாக" (யாத். 20:7) என்ற கட்டளையை மீறுவதாயிருக்குமோ என்ற பயத்தில் இந்தப் பெயரைச் சொல்வதை நிறுத்தினர் என்ற ஒரு வரலாற்று குறிப்பும் உள்ளது.
*“யாவே”* என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்த்த போதிலும், தமிழ் வேதாகமத்தில் 8 இடங்களில் *யேகோவா* என்ற வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்படாமல் காணமுடிகிறது.
யாத். 6:2-3; சங். 68:4; ஏசா. 12:2; 26:4; எரே. 16:21; 33:2; ஓசியா 12:5
எபிரேய பழைய ஏற்பாட்டில் “யேகோவா” என்கிற வார்த்தை 6,519 முறை வருகிறதாம்..!!
சர்வ வல்லமையுள்ள யேகோவா தேவனை, பிதா என்று அழைக்க நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்... அல்லேலூயா
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக