by : Eddy Joel Silsbee
எப்போதும் நம்மை அன்புகூர்ந்து நம்மை ஆசீர்வதிக்கும் பிதாவிற்கே சகல நன்மையையும் கனமும் உண்டாவதாக.
இன்று துவங்கி சில நாட்களுக்கு தேவனின் தன்மையின் அடிப்படையில் அவரது நாமமாக சொல்லப்படும் வார்த்தைகளை தினம் ஒன்றாக தியானிக்க இருக்கிறோம்.
இன்று காணும் வார்த்தை *ஷடாய்*
ஏலோஹிம் - பன்மையில் குறிக்கப்படும் வார்த்தையாகிய தேவன்
ஏலோஆ – ஒருமையில் குறிக்கப்படும் வார்த்தையாகிய தேவன்
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் தங்களது பெயருக்கு முன்பாக தேவனை முன்னிறுத்திக்கொள்வார்கள்.
*எ.கா:* எலியா, எல்க்கானா, எலியேசர், எலியாக்கீம், எலிகூ, எலிசா, எலிமலேக், எலிசபெத் என்று ஏராளம்.
ஷடாய் என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் : சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் / எல்லாவற்றிற்கும் போதுமானவர்.
தேவன் சர்வ வல்லவர் என்பதால் – எல்ஷடாய் என்று நாம் அழைக்கிறோம்.
“எல்ஷடாய்” என்கிற எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் அப்படியே பார்க்க முடியாது. மொழி பெயர்த்தே தமிழில் வருகிறது.
முதல் முறையாக வேதாகமத்தில் ஆதியாகமம் 17:1ல் இந்த வார்த்தையை காணமுடியும்.
ஆதி. 17:1 “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: *நான் சர்வவல்லமையுள்ள தேவன்*; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” என்று சொல்வதைக் காணலாம்.
வேதாகமத்தில் சுமார் 48 இடங்களில் இந்த *ஷடாய்* என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் சிலவற்றை உங்கள் குறிப்புகளுக்காக பதிவிடுகிறேன்.
ஆதி. 28:3; 35:11; 49:25; எண். 24:3-4; ரூத் 1:20-21; யோபு 5:17; 6:4, 14; எசே. 13:6, 10:5; சங். 91:1; யோவேல் 1:15
நம் அனைத்து தேவைகளையும், விண்ணப்பங்களையும் நிறைவேற்றி சர்வவல்லமையுள்ள தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/tkaVfihUNrk
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக