*கிறிஸ்தவ மதத்தைவிட்டு கிறிஸ்தவத்திற்கு திரும்புவது அவசியம்* by : Eddy Joel Silsbee
வார்த்தையாகிய நம் ஆண்டவரின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
சபையில் கொடுக்கப்படும் செய்தி,
சபையாருக்கு பிரயோஜனமாகவும்,
விசுவாசத்தில் வளரும்படியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
எந்த சூழ்நிலையினாலும்;
பேசுபவர்
நெருக்கப்பட்டு
துவண்டு போய்
கடமைக்கு ஏதோவென்று நேரத்தை கடத்தி போகாதபடிக்கு,
பரிசுத்த ஆவியானவர் அவரை இன்னும் அதிகமாய் பயன்படுத்த,
*சபையாரும் பேசுபவர்களுக்காகவும் வார்த்தைக்காகவும் ஜெபிக்க வேண்டும்*. (எபே. 6:19-20)
கேட்பவர்கள் ஒவ்வொருவரும்,
கொஞ்சமாகிலும் அன்று
வேதத்தின் இரகசியங்களில் புதியதாக ஏதாகிலும் தெளிவுபெற வேண்டும் என்றும்,
அதினால் அவர்கள் விசுவாசத்தில் வளர வேண்டுமே என்ற தாகம் *ஊழியர்களுக்கு இல்லாவிடில் சபை கோமாவில் இருப்பது உறுதி*.
கூடும் வேளையில்,
இயேசு கிறிஸ்து நம் மத்தியில் இருக்கிறார் என்ற உணர்வு இருந்தால், அதற்கேற்ற பயமும், மரியாதையும் தானாய் வரும்.
கூப்பிட்டதும் ஆவியானவர் வருகிறவராகவும்
ஆமேன் போட்டு அவரவர் தம் தம் வீட்டிற்கு போவது போல ஆவியானவரும் எங்கோ போய்விடுவதாக நினைக்கும் கும்பலில் நீங்கள் இருந்தால்;
”நீங்கள் அல்ல – அதை நடத்தும் முதலாளியின் வளர்ச்சியையே காணமுடியும்” !!
ஒரு பக்கம்…. இரட்சிப்பும் சுவிசேஷமும் என்னவென்றே தெரியாத நிலையில் கிறிஸ்தவ மத வியாபாரம் களைகட்டி விற்பனை நடைபெறுகிறது.
மறு பக்கத்தில்….. ஞானஸ்நானத்திற்கு முன்னரே இரட்சிப்பு என்றும் சுவிசேஷம் அறியாமலேயே இரட்சிக்கப்பட்டேன் என்றும் சொல்பவர்கள் அறியாமையில் வைராக்கியமும் கொள்கிறார்கள். ரோ. 6:1-7; 1கொரி. 15:1-5; அப். 22:16; 2:36-38; மாற்கு 16:16; கலா. 3:27, ரோ. 10:9; அப். 10:47-48; மத். 28:18-20
ஆகவே, உண்மையான உணர்வு உள்ளவர்களாய்
மூன்றாவது பாடலின் முடிவில் அல்ல தேவன் எப்போதும் நம்மில் இருக்கிறார் என்பதை அறிந்து கிறிஸ்தவ மதத்தை விட்டு தேவ பயத்தோடும், நடுக்கத்தோடும் *உண்மையான கிறிஸ்தவத்திற்கு* திரும்பவேண்டும்.
பேசுபவர்களும் கேட்பவர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்யும்போது, மனிதன் அல்ல தேவன் மகிமைப்படுவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Omd87v7oXBQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக