ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தலையை விட்டு வாலை பிடித்தால் விரயமே

*தும்பைவிட்டு வாலை பிடித்தால் விரயமே*

By : Eddy Joel Silsbee

 

அன்பின் தேவனாகிய நம் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சட்டத்தை பின்பற்றாமல் சாலையில் வாகனம் ஓட்டினால் சிறிது தூரம் அல்லது சிறிது காலம் விபத்தின்றி பிரயாணம் செய்ய முடியும். ஒருவேளை சொந்த வீட்டினருகே இன்னும் கொஞ்சகாலம் கூடுதலாக சுய சுதந்திரத்தை அநுபவிக்கமுடியும்.

 

ஆனால் காவல் துறை கையில் சட்டமீறுதலுக்காக அகப்படும் நாளில்  செய்த தவறின் தண்டத்தொகையை கட்டுவதிலிருந்து மீளவே முடியாது.

 

அதுபோல கிறிஸ்தவன்;

கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் கீழ்படியாமல், தனக்கு தோன்றியபடி தாறு மாறாக பின்பற்றும்போது, அதன் தண்டத்தொகை நியாயதீர்ப்பு நாளில் கட்டாயம் வசூல் செய்யப்படும்…

 

அந்த தண்டத் தொகையானதோ பணமாக அல்ல;

மாறாக,

எப்படியாவது பரலோகம் போய்விடவேண்டுமென்று நீங்கள் வாழ்நாள் முழுதும் போராடிய உங்களது சொந்த ஆத்துமா தான் என்பதை அந்நாளில் உணர நேர்ந்தால் எவ்வளவு பெரிய நஷ்டமாயிருக்கும் ?

 

அப்போஸ்தலர்கள் நமக்கு காண்பித்த;

வாரந்தோறும் தேவனுடைய தொழுகை,

வாரந்தோறும் கர்த்தருடைய பந்தி,

வாரந்தோறும் காணிக்கை,

தொழுகையில் பாடல்,

கூடுகையில் ஜெபம்,

தேவசெய்தியை கேட்டு சத்தியத்தின்படி கீழ்படியாமல்,  

வாழ்வில் அநுதின ஜெபம் மற்றும் வேதவாசிப்பை விட்டு மற்ற கிறிஸ்தவரிடத்தில் அன்பு கூற தவறினாலும் சிக்கல் உள்ளது !!

 

யோ. 13:34-35ஆம் வசனத்தை படித்துவிட்டு அன்பை அனைவரிடமும் உருகி உருகி குழைவது வீண் !!

 

ஏனென்றால், 1யோ. 5:.2ல்  நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து *அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று* அறிந்துகொள்ளுகிறோம் என்பதை சுட்டிக்காண்பிக்கிறது.

 

மேலும், 1யோ. 3:14-15  நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள் என்று யோவான் அப்போஸ்தலன் தெளிவுபடுத்துகிறார்.

 

ஆகவே, மனிதர்களிடத்தில் அன்பை மாத்திரம் காண்பிப்பது போதாது ஆனால் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிவதே அன்பு என்பதை நினைவில் கொள்வோம். தலையை விட்டு வாலைப்பிடித்தால் பிரயாசம் வீணாகிப்போகும்.

 

இன்றும் காலம் உள்ளது. எதில் தவறுகிறோம் என்று ஆராய்ந்து வெட்கப்படாமல் அதை சரிசெய்வோம் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/eC4cwv-nPug

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக