*பயனற்ற உலகத்தரம்*
By : Eddy Joel Silsbee
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பரலோகத்தின் செழிப்பையும் தேவ குமாரன் என்னும் மேன்மையையும் விட்டு தன்னைத்தானே வெறுமையாக்கி ஏழ்மையான ஏழை கோலம் எடுத்து இந்த உலகத்திற்கு “*கிறிஸ்துவாக*” இயேசு வந்தார். பிலி. 2:6-7, யோ. 1:14
இப்படி ஒரு ஏழையானவர் *இரட்சகராய் இருக்கமுடியாது* என்று பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோ. 7:41
பட்டணத்தில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை நாசரேத்து போல ஒரு குக்கிராமத்தில் இருந்து எப்படி இஸ்ரலேவுக்கு இரட்சிகர் வரமுடியும் என்ற தரம் அடிப்படையில் அவர்களது மனம் அவரை அங்கீகரிக்க மறுத்தது. யோ. 1:46
பல நேரங்களில் நாமும் நமது தரத்தை நிதானித்து இப்படி சிந்தித்து விடுகிறோம்.
பணமோ, செழிப்போ, ஆர்ப்பாட்டமோ, பகட்டோ, படிப்போ, மொழியோ, உடையோ, பந்தாவோ இப்படி எதையுமே ஆண்டவர் உங்களிடம் கேட்பதும், எதிர்பார்ப்பதும் கிடையாது. அல்லது உலக தரத்தில் உயர்ந்தவர்ளுக்கு முன்வரிசையோ, தனி ஸ்பெஷல் ஆசீர்வாதமோ கொடுப்பதும் கிடையாது. ஏசா. 58:2-3, ரோ. 3:22, 10:12-13
உலக மேன்மைக்கான எண்ணம் நம்மை உலகத்தோடு கொண்டு போய் விடும். மத். 6:21
அவருக்கு வேண்டியது தாழ்மையான இருதயம் மாத்திரமே. சங். 138:6
பூமிக்கானவைகள் அல்ல - மேலானவைகளை (பரலோகத்தில் உள்ளவைகளை) நாடுவோம் (கொலோ. 3:1)
ஒருவரிடமும் எந்த வேற்றுமையையும் காண்பிக்காமல் அன்பை மாத்திரமே வெளிபடுத்துவோம். யோ. 15:17
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/vWqgdTFPbfI
*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக