ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நம்மைக் குறித்து மற்றவர் என்ன நினைக்கிறார்கள்?

*நம்மைக் குறித்து மற்றவர் என்ன நினைக்கிறார்கள்?*

By : Eddy Joel Silsbee

 

நமக்காய் எப்போதும் பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களை நினைக்கும் போதெல்லாம் தேவனை துதிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். பிலி. 1:6

 

அவ்வாறே, கொலோசே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒழுக்கத்திலும், கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாகவும் இருப்பதை அப். பவுல் கண்டு சந்தோஷப்படுகிறார். கொலோ. 2:5

 

அதுபோலவே, தெசலோனிக்கே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் நம்பிக்கையும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியன் கிரீடமாகவும் இருப்பதை தெரிவிக்கிறார். 1தெச. 2:19-20.

 

பிலேமோனின் அன்பும் அரவணைப்பும்,

பரிசுத்தவான்கள் இளைப்பாறவும் ஆறுதலடையவும் அவரின் அன்பை அறிந்து புரிந்து கொள்ளவும் ஏதுவாயிருந்தது.  பிலே. 1:7

 

பிதாவாகிய தேவனும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம் மீது வைத்த மற்றும் வெளிப்படுத்தின அன்பை சொல்லி தெரியவேண்டுமோ? யோ. 3:15-17

 

ஏதோ நாம் வாழ்கிறோம்,

வேலைக்கு போகிறோம்,

சம்பாதிக்கிறோம் என்றில்லாமல்

*மற்றவர்கள் நம்மை குறித்து நினைக்கும் போது அவர்கள் நமக்காக தேவனை துதிக்கும் அளவிற்கு நாம் இருக்கிறோமா*?

 

நன்மையினாலும், உபசரிப்பினாலும், உதவிகளாலும், ஆதரவினாலும், நம் கிரியை நிறைந்து இருக்கும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.

 

நம்மை யார் நினைத்தாலும் நமக்காக அவர்கள், தேவனை  துதிக்கவும், ஸ்தோத்தரிக்கவும் இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் நம்மில் வளரட்டும். 2கொரி. 2:8, 8:24, கொலோ. 3:14

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/tZIMw4VgGZg

 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக