#379 - *மூலபாஷையின்படி நரகமும் கல்லறையும் ஒன்றா?*
Hehanna or henna சரியான பெயர் தெரியவில்லை எனக்கு, அதோட பொருள் மூலபாஷையில் கல்லறையாம். ஆனால் தமிழ்ல மொழிமாற்றம் செய்தவர்கள் நரகம்னு மாத்திட்டாங்களாம். இது உண்மையா பொய்யானு தெரியல ஆனால் ஒரு தனியார் இணைய தளத்திலிருந்து facebookக்கு தொடர்ந்து share பண்றாங்க. விளக்கவும்.
*பதில்* :
1) கல்லறை என்ற தமிழ் வார்த்தைக்கு வேதாகமத்தின் மூலபாஷையில் :
பழைய ஏற்பாடு : எபிரேயத்தில் கிபர் அல்லது கிப்ராஹ்.
புதிய ஏற்பாடு : கிரேக்கத்தில் ம்னேமியோன்
2) நரகம் என்ற தமிழ் வார்த்தைக்கு வேதாகமத்தின் மூலபாஷையில் :
பழைய ஏற்பாடு : எபிரேயத்தில் ஷிஹோல். (யோபு 26:6)
புதிய ஏற்பாடு : கிரேக்கத்தில் டர்டாரூ (2பேதுரு 2:4) அல்லது கெஹன்னா (யாக். 3:6)
கல்லறை என்று நம் வழக்கத்தில் பயன்படுவது மண்ணினால் செய்யப்பட்ட நம் சரீரத்தை வைக்கும் இடம். (உண்மையில் கல்லறை என்பது கல்லில் தோண்டப்பட்ட அறை... அவ்வாறே யூத காலங்களில் சரீரத்தை வைப்பார்கள். லூக். 23:53
நரகம் கைகளால் செய்யபடாத என்றும் அழியாத சரீரத்தை தண்டனைக்கென்று தள்ளும் இடம் (1கொரி. 15:52)
ஆகவே கல்லறை வேறு நரகம் வேறு.
இந்தியாவில் நாம் சரீரத்தை அடக்குவது கல்லறையில் அல்ல. முறையாக அர்த்தத்தோடு சொல்லவேண்டுமானால் அது மண்னறை !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக