சனி, 3 ஜூலை, 2021

இரகசியத்தை அம்பலப்படுத்தலாகாது - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*இரகசியத்தை அம்பலப்படுத்தலாகாது - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 03 July

by : Eddy Joel Silsbee

 

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்திற்கே சகல கனமும் துதியும் உண்டாவதாக..

 

ஒருவரை ஒருவர் சார்ந்தும்,

அயலானோடு நட்பு பாராட்டியும்,

எல்லாரிடமும் அன்பு செலுத்தியும் நாம் வாழ விரும்புகிறோம்.

 

அளவில்லா பேச்சுக்கள் நம்முடைய சமாதானத்தை நிச்சயம் கெடுக்கும் என்பதை மறந்து போகக்கூடாது.. 

 

நம் சொந்த காரியத்தை மாத்திரம் உரியவரிடம் பகிர்வது நமக்கு உகந்தது.

 

சம்பந்தப்பட்டவர் இல்லாத பட்சத்தில் ஒருவரைக் குறித்து தவறாக பேசும் எந்த சூழ்நிலையும் தீங்கில் முடியும்.

 

மிக முக்கியமாக இரகசியம் என்று சொன்ன ஒரு கருத்தை, ஒருபோதும் நம்மிடத்திலிருந்து வெளியே போகக் கூடாது.. 

 

நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. நீதி. 25:9

 

புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். நீதி. 11:13

 

தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே. நீதி. 20:19

 

ஆவியில் உண்மையுள்ளவர்கள் காரியத்தை மூடுபவர்கள்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/LbYdmkcR0hI

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக