வெள்ளி, 23 ஜூலை, 2021

சபையாய் கூடும்போது சொந்தக் கதை வேண்டாமே

*சபையாய் கூடும்போது சொந்தக்கதை வேண்டாமே

by : Eddy Joel Silsbee

 

தொழுகைக்கு ஒரே பாத்திரரான நம் பரிசுத்த தேவன் நம்மை நினைத்தருள்வாராக  !!

 

கட்டாயத்தினாலோ, நண்பர்களை பார்க்கவேண்டும் என்றோ, கொடுத்த கடனை வசூலிப்பதற்காகவோ, சீட்டுப் பணம் வசூல் செய்வதற்காகவோ, விடுமுறை நாளில் வீட்டில் சும்மா இருப்பதற்கு பதிலாக போய் வரலாமே என்றோ நேரத்தை போக்குவதற்காக வாரத்தின் முதல் நாளை பயன்படுத்தக்கூடாது.

 

ஞாயிற்றுகிழமை வந்ததும் கோயிலுக்கு போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வரலாம் என்று பலருக்கு அந்த நாள் ஒரு கடமையாகிப்போனது.

 

இந்த கொள்ளைநோய் காலங்களில் அதுவும் தடைபட்டதால், ஒன்று கூடி தேவனைத் தொழுது முடியவில்லையே என்ற வருத்தத்தை விட சொந்தக் கதைகளை பறிமாறிக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான் அநேகருக்கு !! எரே. 2:23-25

 

பாட்டுகளைப் பாடி உற்சாகப்படுத்த கிறிஸ்தவ கச்சேரிகளும், க்ளப்புகளும் அதிகம் வந்து விட்டது தற்காலத்தில்.

 

இதுவல்ல தேவனுடைய தொழுகை !!

 

ஒவ்வொரு நாளும் நாம் தேவனை துதித்தாலும்,

சபை கூடுகைக்காக நாம் ஆவலோடு காத்திருந்து,

நம்மை நாமே தயார் செய்து,

காணிக்கையை சேர்த்து வைத்து;

எப்பொழுது வாரத்தின் முதல் நாள் வரும் என்று ஆவலோடு உற்சாகமாய் கூடிவர வேண்டும்.

 

தேவன் நமக்கு செய்த நன்மையை நன்றி சொல்லி அவரை துதிக்க கூடி வர வேண்டும்.

 

தாவீது இராஜா எப்போது அந்த நேரம் வரும் என்று ஆவலோடு காத்திருந்தாராம்.

 

ஆமேன் போட்டு முடிந்ததும்;

வீட்டுக்கதைகளை அல்ல ஒவ்வொருவரின் அன்பையும் நற்கிரியைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமாம் !! எபி. 10:24

 

ப்படிப்பட்ட உற்சாகத்துடன் கூடுவோம். தேவனை மகிமை படுத்துவோம். சங். 84:10, 118:24.

 

அவரே நம்மை அழைத்தவர்.

அவரே நம்மை பாதுகாப்பார்.

பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

 

சகலத்தையும் நன்மையாக மாற்றுவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/UEzZW9DCLgI

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக