#1108 - *நமது பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தேவனுக்குப் பலியிட அழைத்துச் சென்ற குமாரன் ஈசாக்கு. ஆனால் இஸ்லாமியர்களின் குர்ஆன் படி இப்ராஹும் பலியிட கூட்டிச்சென்ற குமாரன் இஸ்மாயில் (இஸ்மவேல்), என்று கூறி பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார்கள். மூலபாஷையில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது*?
*பதில்* : பரிசுத்த வேதாகமத்தை இஸ்லாமியரின் குர்ஆனுடன் ஒப்பிட முடியாது.
வேதாகமத்தில் வரும் பல சம்பவங்களை வைத்து எத்தனையோ கதாசிரியர்கள் புத்தகங்களாகவும், சினிமா படங்களாகவும் வெளியிட்டுள்ளார்கள். அதனுடைய உண்மைத்தன்மையுடன் தங்களது கற்பனை வளங்களையும் சேர்த்து வெளியிடுவது ஒவ்வொரு ஆசிரியர்களின் தனித்துவம்.
*எ.கா*. : டாவின்சி கோட், லெஃப்ட் பிஹைன்ட் போன்ற புத்தகங்கள் மற்றும் சினிமா படங்கள்.
ஒரிஜினலை விட நன்றாக வேலை செய்யும், திறம்பட நமக்கு ஏற்றார் போல இருக்கும் என்று வியாபாரிகள் புதிய ரக மொபைல் ஃபோன்களை நமக்கு அறிமுகப்படுத்தி விற்பது போன்றே வேதாகமத்தை விட, அதைச்சார்ந்து தங்கள் கற்பனைகளையும் சேர்த்து வெளியிடும் எந்த படைப்பும் அதிக விளம்பரம் பெற்று மக்களின் ஆதரவை பெறும். நாம் எப்போதும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடும் போது எவற்றை எவற்றுடன் ஒப்பிடுகிறோம் என்பதை நன்கு அறிந்தபின் அதன் தகவல்களை சரியானதா என்பதை அறியமுடியும்.
பரிசுத்த வேதாகமம் சுமார் 1,500 வருட காலப்பகுதியில் வெவ்வேறு சுமார் 40 எழுத்தாளர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டன. அவ்வாறு தனித்தனியே சுமார் 1500 ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டிருந்தாலும் எழுதப்பட்ட தகவல்களில் எந்த முரண்பாடும் இல்லாததால் அவை அனைத்தையும் 2தீமோ 3:16ல் சொன்னது போல தேவ ஆவியானவரே எழுதினார் என்பதை நாம் மறுக்க முடியாது.
இஸ்லாமியரின் புத்தகத்திலுள்ள தகவல்களை நாம் பரிசுத்த வேதாகமத்துடன் ஒப்பிடுவது தவறு.
குர்ஆன் இஸ்லாமியரின் கோட்பாடும் நம்பிக்கையும்.
கத்தோலிக்கர்களை கிறிஸ்தவத்துடன் ஒப்பிட்டால் எப்படி 99% வேதத்திற்கு முரணான மாறுபாட்டை அறியமுடிகிறதோ, இஸ்லாமியருடன் கிறிஸ்தவத்தை ஒப்பிட்டாலும் அவ்வாறு மாறுபாட்டைக் காணமுடியும்.
*நமக்கு தேவ ஆவியானவர் எழுதிவைத்ததன் தகவல் ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஆபிரகாமின் மனைவி சாராள்*. இது தேவனுடைய வார்த்தை. ஆதி. 17:19
இஸ்ரவேலர்களின் முற்பிதாக்களாக தேவனே தன் வார்த்தையில் மோசேக்கு தன்னை வெளிப்படுத்தியபோது நான் ஆபிகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களின் தேவன் என்றார் !! யாத். 3:6
இஸ்லாமியர்கள் நம் வேதத்துடன் மாறுபடும் சில குறிப்பிட்ட தகவல்களை கீழே குறிப்பிடுகிறேன். அவர்களது கூற்றுப்படி ஆபிரகாமின் மனைவி ஆகார். ஆபிரகாமின் மகன் இஸ்மவேல். இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை ஆனால் பெரிய தீர்க்கதரிசி. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. அவர் உயிர்த்தெழவும் இல்லை என்று கூறுவர்.
மேலும், *கீழேயுள்ள கூற்றுக்கள் அவர்களால் மறுக்கப்படுகிறது*:
பிதா, குமாரன் & பரிசுத்த ஆவியானவராகிய மூவரில் ஒரே தேவன் இருக்கிறார். 1யோ. 5:7
மனிதனின் வித்து இல்லாமல், பரிசுத்த ஆவியானவரால் மாம்சத்தில் வந்த தேவன் இயேசு. ஆதி. 3:15, 1யோ. 4:2, 1தீமோ. 3:16, ரோ. 9:5
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து எழுந்தார். 1கொரி. 15:4
மனிதனுக்கு இரட்சிப்பு அவசியம் அவன் பாவம் செய்பவன். ரோ. 3:23
விசுவாசித்து ஞானஸ்நானத்தை பெற்று இரட்சிப்பை அடைய முடியும். மாற்கு 16:16, அப். 22:16
ஆகவே, பரிசுத்த ஆவியானவரால் எழுதி நமக்கு தந்தருளப்பட்ட வேதவாக்கின்படி ஆபிரகாமின் மகன் ஈசாக்கு தான்.
உலகமும், மற்றவர்களும் பின்பற்றுவது அவரவர் நம்பிக்கை.
நம்முடைய நம்பிக்கை பரிசுத்த வேதாகமம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
வியாழன், 22 ஜூலை, 2021
#1108 - நமது பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தேவனுக்குப் பலியிட அழைத்துச் சென்ற குமாரன் ஈசாக்கு. ஆனால் இஸ்லாமியர்களின் குர்ஆன் படி இப்ராஹும் பலியிட கூட்டிச்சென்ற குமாரன் இஸ்மாயில் (இஸ்மவேல்), என்று கூறி பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார்கள். மூலபாஷையில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக