*பரதேசியிலிருந்து சுதேசியாகும் பாதை - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 02 July
by : Eddy Joel Silsbee
ஆறுதலின் தேவனே நம்மை பெலப்படுத்துவாராக.
சரீர சுகவீனமும், வியாதியும், நேசிக்கும் நபர்களின் இழப்பும் நமக்கு வரும்போது; எந்த மனிதனாலும் நம்மை சமாதனப்படுத்த முடியாது.
எவ்வளவு தான் ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள இருதயம் மறுக்கும்.
அவரவர்களுக்கு அத்துக்கம் வரும்போதே அதன் வலியை உணரமுடியும்.
சக ஊழியனை பார்க்க முடியாமல் பவுல் வருத்தப்பட்டார். 2கொரி. 2:13, 7:6.
அடைந்த போதோ தேவன் ஆறுதல் கொடுத்தார் என்றார். 2கொரி. 7:6
நமக்கு வரும் இழப்புகளும், துன்பங்களும் நம்மை நெருக்கினாலும், இந்த உலகம் நமக்கு நிரந்தரம் இல்லை.
வீட்டிற்கு வந்த விருந்தாளி, அதிக நாட்கள் தங்கி விடுவது போல நமக்கு இந்த உலக ஜீவியம். 1பேதுரு 1:17, எபி. 11:13.
நம்முடைய நிரந்தர குடியிருப்பு இங்கு அல்ல. எங்கிருந்து வந்தோமோ அங்கே தேவனோடு இருக்கிறதே நிரந்தரம். எபே. 2:19, மத். 10:25, 1யோ. 3:1, எபி. 12:22-24, பிலி. 3:20, 2கொரி. 5:1, 8, சங். 127:3
ஆகவே, எப்படியாகிலும் நாம் மீண்டும் திரும்பவேண்டும் என்று பாதையை வகுத்துக்கொடுத்த பிதாவினிடம் திரும்பவேண்டும்.
நம்முடைய நிரந்தர இடமான பிதாவின் சந்நிதியில் நித்திய ஜீவனை அடைய, கிறிஸ்துவைத் தவிர வேறு எவரும் நம்மை பரலோகம் சேர்க்க முடியாது என்பதை உணர்ந்து, அவர் அளித்த இரட்சிப்பை முறையாக பெற்று விசுவாசத்திலும், மற்றவர்கள் மீதுள்ள அன்பிலும் நாம் தொடர்ந்து நிலைநிற்போம். யோ. 14:6
ஆண்டவரே நம்முடைய இருதயத்தை அறிந்து நமக்கு ஆறுதல் செய்வார். 1தெச. 3:6-7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக