*சுயவிருப்பத்தைவிட தேவசித்தமே அவசியம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 11 July
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் நம்மை வழி நடத்துவாராக.
தான் தேவனுடைய குமாரனாக இருந்தாலும்; ரோ 8:32
கூப்பிடும் முன்பே தேவதூதர்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்தாலும்; மத். 4:11
சொன்னவுடனே சகல அற்புதமும் நடந்தாலும்; மாற்கு 3:8
இயேசு கிறிஸ்து தனக்கு இருக்கும் அதிகாரத்தை தேவ சித்தத்திற்கு எதிராக பயன்படுத்தவில்லை. கலா. 1:4
அவர் நினைத்திருந்தால் தன்னைப் பிடிக்க வந்த காவலாளிகளிடமிருந்து தப்பியோ அல்லது மாயமாகியோ போயிருக்க முடியும். குறைந்தபட்சம் அவர்களை பயமுறுத்த கூட இல்லையாம். (1பேதுரு 2:23)
தேவன் என்ன சித்தம் வைத்திருக்கிறாரோ, அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.
கெத்செமேனே தோட்டத்தில் ஜெபிக்கும் போது கூட “உம் சித்தமே ஆகக்கடவது” என்று ஜெபித்தார். மாற்கு 14:36
நாம் எவ்வளவு கோபப்பட்டாலும் மற்றவர்களுக்கு எதிராய் ஜெபிக்கவோ, பிறரை மிரட்டவோ இல்லாமல் தேவ சித்தத்திற்கு மாத்திரம் ஒப்புக் கொடுப்போம்.
சகலத்தையும் நமக்கு நன்மையாகவும் மேன்மையாகவும் மாற்ற அவர் ஒருவரே வல்லவர். எபி 2:18
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக