#998 - *நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய், நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்* என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 21:18. இந்த வசனத்திற்கு விளக்கம் தாருங்கள் ஐயா
*பதில்* :
*நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது *
- ஆரம்பகால வாழ்க்கையில் அனைவரும் (பேதுரு உட்பட) தங்கள் ஆடைகளைச் தாங்களே சுற்றிலும் கட்டினார்கள்.
- இங்கே சுய சுதந்திரத்தின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது.
*நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்*;
- இதற்கு முப்பது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பேதுரு கொல்லப்பட்டதாக பண்டைய எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். அந்த நேரத்தில் அவரது துல்லியமான வயது தெரியவில்லை.
- பேதுரு கொல்லப்பட்டபோது, அவன் தலைகீழாக தான் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகக் வரலாற்றில் கூறப்படுகிறது. ஆண்டவரை தான் ஒரு காலத்தில் மறுதலித்திருந்ததால் - இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போல தான் அறையப்பட தகுதியற்றவர் என்று கூறியதாக செய்திகள் உண்டு.
கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் (யோ 21:18) பேதுரு இறப்பதற்கு தன்னுடைய தயார்நிலையை தெரிவிக்கிறது என்று சொல்லமுடியும்.
-பேதுருவின் ஆரம்ப ஊழிய நாட்களில் இருந்த சுதந்திரம் தனக்கு மரணம் நேரிடும் காலத்தில் அவ்வாறாக சுயமாக செய்ய ஏதுவில்லாதிருந்திருக்க வேண்டும். அவர் சுதந்திரமாக சிலுவையில் கைகளை நீட்டினார். தனது உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்.
*வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்*
-சிலுவையில் அறையப்பட்ட நபர்களின் கைகால்கள் பெரும்பாலும் ஆணியடிக்கப்படுவதற்குப் பதிலாக கட்டப்படுவது சரித்திரம்.
-தன் கரங்களை இவர் சுதந்திரமாக நீட்டினாலும் பேதுருவிற்கு இஷ்டமில்லாத இடம் என்று சொல்லப்படுவது மரண ஸ்தலமாக இருக்கக்கூடும். அதைச் செய்ய நிர்பந்திக்கும்போது தயாராக இருந்தாலும், அவர் அதைத் தேடியிருக்கமாட்டார்; அது தேவனுடைய சித்தமாக இருக்கும்போது அவர் அதிலிருந்து விலகி ஓடவும் எத்தனிக்க மாட்டாரல்லவா.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
சனி, 10 ஜூலை, 2021
#998 - நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய், நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக