#1098 - *Paul எதற்காக மொட்டை அடித்தார்*?
*பதில்*: இந்த குறிப்பிட்ட யூத முறை பொருத்தனையை பவுல் ஏன் பின்பற்றத் தேர்ந்தெடுத்தார் என்று வேதம் நமக்கு பதிவு செய்யவில்லை. இருப்பினும் நாம் ஒரு நியாயமான யூகத்தை யூகிக்க முடிகிறது.
அவர் எருசலேமுக்குச் செல்வதாகவும், ஒரு குறிப்பிட்ட பண்டிகையில் சரியான நேரத்தில் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார் (அப். 18:21).
யூத வட்டாரங்களில், தங்கள் நம்பிக்கையை கைவிட்டு, பவுல் ஒரு கிறிஸ்தவனாக மாறியவர் என்று நன்கு அறியப்பட்டிருந்தார். (அப். 21:28, 21, 24:5-6)
இந்த பொருத்தனையின் வழக்கத்திற்கு உடன்படுவதன் மூலம் யூதர் மத்தியில் கிறிஸ்துவைப் பற்றி பேச இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நினைத்திருக்கலாம்.
தீமோத்தேயு விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் சத்தியம் அந்த ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒரு கதவு திறக்கும் என்று நினைத்தது போல, தலையை மொட்டையடித்துக்கொள்வதனால் தங்கள் சகோதரரின் மத்தியில் சுவிசேஷம் எடுத்துச்செல்ல வழிவகுக்கும் என்றும் நினைத்திருக்கலாம். அப். 16:1-3; ரோ. 11:13-14
மொட்டையடிப்பதில் எந்த அவசியமுமில்லை. தன் விசுவாசத்தில் எந்த வித்தியாசமும் செய்யாத ஒன்றாகவும் மற்ற எவருக்கும் இடறலடையாததாகவும் கண்டிருக்க வேண்டும். 1கொரி. 8:10
இது கிடைக்காத வாய்ப்பின் கதவுகளைத் திறக்கும். அவர் நசரேய சபதத்தின் ஒரு பகுதியை வைத்திருந்தாலும், அவர் இந்த வகை சபதத்தை முழுமையாக பின்பற்றியிருக்க மாட்டார். ஏனென்றால் அவரது தலையை மொட்டையடிப்பதோடில்லாமல், நசரேய பொருத்தனையில் அனைத்து திராட்சை பொருட்களிலிருந்தும் விலகயிருத்தல் அவசியமாயிற்றே. எண். 6:2-4
ஒரு கிறிஸ்தவராக, இப்படிப்பட்ட பொருத்தனையில் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்திருக்க வாய்ப்பில்லையல்லவா? அப். 20:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஞாயிறு, 9 மே, 2021
#1098 - Paul எதற்காக மொட்டை அடித்தார்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக