#1097 - *பெந்தெகொஸ்தே என்பது பண்டிகை சரி. ஆனால் யெகோவா என்பது என் நாமம் என்று தேவன் சொல்லி இருக்கிறாரே அப்படியென்றால் அது உண்மையான சபை என்று எடுத்து கொள்ளலாமா*?
*பதில்* : உங்கள் கேள்வியில் மூன்று கூறுகள் உள்ளது. இந்த மூன்றும் தனித்துவம் வாய்ந்தவை.
*பெந்தெகொஸ்தே* என்பது கிரேக்க வார்த்தை. தமிழில் ஐம்பதாம் நாள், ஆங்கிலத்தில் Fiftieth Day*.
பஸ்கா வாரத்திற்கு ஐம்பது நாட்களுக்குப் பிறகு நடந்த ஒரு கொண்டாட்டத்தைக் பெந்தெகொஸ்தே பண்டிகை என்று அழைக்கப்பட்டது.
லேவி. 23:15-16 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
இதை அறுப்பின் பண்டிகை (யாத்.23:16) அல்லது வாரங்களின் பண்டிகை (யாத். 34:22) அல்லது முதற்கனி பண்டிகை (எண். 28:16) என்றும் அழைக்கப்பட்டது. நமக்கு அல்ல, இந்தப் பண்டிகைகள் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் முடிவில் (ஓய்வு நாளான சனிக்கிழமைலிருந்து) 50 நாட்கள் கணக்கிடப்பட்டதால், பெந்தெகொஸ்தே நாள் எப்போதும் வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) வரும்.
*யேகோவா* என்பது எபிரேய வார்த்தை.
யாத். 6:2-3 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் *யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
சங். 68:4 … அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
பெயர்கள் என்று நாம் வேதத்தில் அறியப்படுவது பெரும்பாலும் அதன் தன்மையை விளக்குவதாகும். வேற்று மொழியில் உள்ளதால் அதன் அர்த்தத்தை அறியாமலிருப்பது இயல்பு.
மண்ணாங்கட்டி, கருப்பன், மீசைக்காரன், வெள்ளையன் என்ற பெயர் உடையவரை நாம் அழைக்கும் போதுள்ள உணர்வு நமக்குத் தெரியுமே.
வேதாகமத்தில் உள்ள சில பெயர்களை அர்த்தத்துடன் பட்டியலிடுகிறேன்:
நாபால் - பைத்தியக்காரன் (1சாமு.25:25)
சேத் - ஈடானவன் (ஆதி. 4:25)
ஆபிராம் - மேலான தகப்பன் (ஆதி. 17:5)
ஆபிரகாம் - திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் (ஆதி. 17:5)
பேதுரு - கல்/பாறை (மத். 16:18)
சவுல் - கேள் / வினவு
பவுல் - நில்
தகப்பனோ, சமுதாயமோ, உறவினரோ - மற்றவருக்கு பெயர் சூட்டுவர்.
தேவனுக்கு துவக்கம் என்பது கிடையாது. அவருக்கு யார் பெயரை சூட்டுவது? (எபி. 6:13) அவரே ஆதியானவர் என்பதால் தன்னைக் குறித்து, தான் யார் என்பதை மோசேயிடம் *நானே நான்* என்றார். அதாவது *இருக்கிறவராகவே இருக்கிறேன்* என்றார். யாத். 3:14
தேவனுடைய தன்மைக்கு ஏற்ப பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டார். யெயோகவாநிசி, யெகோவாஷம்மா, யெகோவாயீரே என்று பலபல பெயர் உண்டு.
*எக்ளீஷியா* என்ற கிரேக்க வார்த்தையை *சபை* என்று தமிழில் மொழிபெயர்த்தார்கள். அப். 2:42
எக்ளீஷியா என்றால் பிரித்தெடுக்கப்பட்டவர் என்று பொருள். அதாவது தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
அதனிமித்தமே, அப். 2:38ம் வசனத்தின்படி இயேசுவை கிறிஸ்துவாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் (அப். 2:36, பிலி. 2:11) தேவனுடைய குமாரனாகவும் (அப்.8:37) ஏற்று, பாவமன்னிப்பிற்கென்று (அப். 2:38, 22:16) ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அவயவமாக இணைக்கப்படுகிறார்கள் (எபே. 5:30, ரோ. 12:5, 1 கொரி. 6:15, 12:27).
கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் இணைக்கப்படுவதால் கிறிஸ்துவினுடையதாகிறது.
பிதாவானவர் அல்ல, இயேசு கிறிஸ்துவே நமக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தார். அவரை உயிர்த்தெழுப்பியது பிதாவானவர். ரோ. 10:9, 1கொரி. 6:14, 15:15
அந்த சபையை (நம்மை) கறைதிரை அற்றவர்களாக பாதுகாத்து தனக்காக பரிசுத்தப்படுத்தி பத்திரப்படுத்துகிறார் இயேசு கிறிஸ்து. எபே. 5:27
தன்னுடைய ஆளுகை முடிவிற்கு வரும் நாளில், சகலத்தையும் பிதாவானவர் கையில் ஒப்புக்கொடுப்பார். 1கொரி.15:24
ஆகவே, சபை என்பது கிறிஸ்துவினுடையது. அதற்கு தலைவர் கிறிஸ்துவே. எபே. 5:23.
அப்பேற்பட்ட அதிகாரத்தை கிறிஸ்துவிற்கு கொடுத்தது பிதாவானவர். எபே. 1:23, 1கொரி. 11:3.
சபைக்கு கிறிஸ்துவே தலை. எபே. 4:15, கொலோ. 1:18
கிறிஸ்துவை தலைவராக கொண்டில்லாமல், மனிதர்களை தலைவராகவும், நிறுவனராகவும் கொண்டுள்ள சபைகள், கிறிஸ்துவின் சில உபதேசங்களையும் தங்களின் கோட்பாடுகளையும் உட்புகுத்தி கிறிஸ்தவ மதமாக உருவெடுத்தவைகள். அவைகளை நாம் கிறிஸ்துவின் உபதேசத்துடன் ஒப்பிட்டால் பல வேறுபாடுகளை காணமுடியும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் *கிறிஸ்துவின் உபதேசத்தை மாத்திரம்* கடைபிடிக்கவேண்டியது அவசியம். மத். 17:5, யோ. 10:3, 27
இல்லாவிடில் மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது !! 2தெச. 1:7-10
சரியாக நிற்கிறேன் என்ற தைரியத்தில் பந்தையப் பொருளை நாம் இழந்து விடாமல் இருக்க பிரயாசப்படுவோம்.
*கட்டிடங்கள் சபை அல்ல*
புதிய பிரமாண காலத்தில் இருக்கிறோம்.
மணி அடித்து அழைக்கும் கட்டிடமோ,
கொட்டு அடித்து கூப்பிடும் கூடாரமோ,
அலங்கரித்து உயர்ந்த வடிவமைப்புடன் கரையோரத்திலிருக்கும் கட்டிடத்தையோ, *“சபை” என்று வேதம் சொல்லவில்லை*.
அவையெல்லாம் *கட்டிடங்கள்* தான்.
கடவுள் அதனுள்ளே தங்கி இருப்பதில்லை !! (அப். 17:24)
பிரசங்க மேடை அருகே நின்று ஜெபித்தால் தேவனுடைய காதுகளில் சீக்கிரமாக விழுந்து விடுவது போல நம்பிக்கொண்டு இருப்பது 2,000 வருடங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டு போனது.
இன்னமும் அதையே நம்பிக்கொண்டு நாட்களை வீணடிக்க வேண்டாம். எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் நாம் வாழுகிறோம். யோ. 4:21
இரட்சிக்கப்பட்ட நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். 1கொரி. 3:16
அவர் வியாபித்து இருப்பது நம் சரீரத்தில் மற்றும் அவருடைய கட்டளையின்படியான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர் பிரசன்னாமாகிறவர். மத். 18:20
இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் என்று அப். 2:47ல் வாசிக்கிறோம். எக்ளீஷியா என்ற கிரேக்க வார்த்தைக்கு சபை என்ற தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு “பிரித்தெடுத்தல்” என்பது தமிழ் அர்த்தம்.
உலகத்திலிருந்து பிரித்தெடுத்து தனது சரீரத்தில் ஓர் அங்கமாக்கினார். ஆம், இரட்சிக்கப்படுகிறவர்கள் *கர்த்தரின் சரீரத்தில்* அங்கங்களாக சேர்க்கப்பட்டு வருகிறோம். எபே. 4:16, 25, 5:30
விசுவாசமுள்ளவர்களாகி *கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்* என்று அப். 5:14 சொல்கிறது.
ஒரே சபை ! ஒரே ஞானஸ்நானம் ! என்ற வார்த்தைகளை கேட்டு எல்லாம் ஓகே ஓகே என்று தலையாட்டிக்கொண்டாலும், மேடை வியாபாரிகளின் வார்த்தை ஜாலத்திற்கு விழுந்து, தண்ணீர் ஞானஸ்நானம் மாத்திரம் போதாது இன்னுமொரு ஞானஸ்நானமும் பெற காத்து, அக்கினியால் அழிவைத் தேடிக்கொள்ளக்கூடாது. மத். 3:11-12
காலை ஒரு சபை, மாலை ஒரு சபை, குடும்ப சபை, ஆதி சபை, ஆவிக்குரிய சபை, ஆவியில்லாத சபை என்று பட்டியல் நீளுகிறது…
எவ்வளவு பரிதாபகரமான நிலமையில் கிறிஸ்தவம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதம் ??
மதத்தை விட்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்கு திரும்புவது அவசியம்.
சபை என்ற பெயரிலுள்ள *அத்தனை பிரிவுகளுக்கும்* மனிதர்களே Founder என்பதை நினைவில் கொள்ளவும்!
நீங்கள் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் இருக்கிறீர்களா அல்லது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் பிரிவுகளில் அங்கமாய் இருக்கிறீர்களா என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும். (ரோ. 16:16)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக