#1122 - *கிறிஸ்தவர்கள் தேர்தலில் ஓட்டுப் போடலாமா*? ஓட்டுப்போடுவதால் அது தேவ சித்தத்திற்கு விரோதமாக ஆகிவிடாதா? வசனத்தின்படி விளக்கவும்
*பதில்* : நாமிருப்பது மன்னர் ஆட்சி காலத்திலல்ல. ஜனநாயக ஆட்சி.
ஆகவே, ஒவ்வொரு குடிமகன்களும், கட்டாயம் தங்கள் ஓட்டு உரிமையை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும்.
என் ஜாதி, சொந்தக்காரன், வீட்டாள், உறவு, வேண்டியவர், நண்பர், பாஸ்டர் கட்சி, பாஸ்டரின் ஆதரவு கட்சி என்ற காரணத்தால் எந்த கிறிஸ்தவரும் வேதத்திற்கு புறம்பான காரியத்தை செய்யும் கொள்கையுடையவர்களை ஆதரிக்காமல், தேவன் கொடுத்திருக்கும் உரிமையை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆகவே, வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். இது ஜனநாயக கடமையாகும்.
உலகிற்கு வெளிச்சமாயும், உப்பாகவும் இருக்கும் கிறிஸ்தவர் தங்கள் வாக்கை உபயோகிக்காமல் மவுனமாயிருப்பது வேதத்திற்கு முரணான செயல்.
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். எபே. 5:10-11
கிறிஸ்தவர்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.
அரசாங்கம் எப்படி அமைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம். அதனால் நாம் அமைதியாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்லவில்லை. தேவனுடைய திட்டத்தை “செயல்படுத்த வேண்டிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் நம் கடமை இருக்கிறது” என்று கீழே உள்ள உதாரணங்கள் மூலம் காணமுடியும்.
* யூதர்களை காப்பாற்ற இராஜாத்தி எஸ்தர் நடவடிக்கை எடுத்தார் – எஸ்தர் 8:1-14
* தவறாக தன்னை சிறையில் வைத்த சிறைசாலை அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும்படி தன் குடியுறிமையை கொண்டு பவுல் வலியுறுத்தினார் – அப். 16:25-40
* தான் கசையடிக்கப்படப் போவதை உணர்ந்த பவுல் தன் குடியுறிமையினால் அதை நிறுத்தினார் – அப். 22:24-29
* அரசாங்கத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, தான் கொல்லப்படுவதற்கு திட்டம் தீட்டினவர்களை அடையாளம் காட்டி தன்னை காப்பாற்றிக்கொண்டார் – அப். 23:12-33
* தனக்கு எதிரான ஒரு வழக்கை தீர்த்து வைக்க சட்டத்தை பயன்படுத்தினார் பவுல். அப். 25:10-12
* இராஜாக்களையும் அதிகாரத்தையும் தேவன் தன் சித்தப்படி ஏற்படுத்துகிறார் என்று நாம் சும்மாயிருக்க வேதம் சொல்லவில்லை. தற்போது நடைமுறையில் இருப்பது இராஜாக்கள் முறையல்ல, பெருவாரியான ஜனங்களின் ஓட்டுக்களை பெற்றவர்களே ஆட்சியில் அமறும் முறை.
ஆகவே, தங்கள் விருப்பத்தை, *ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்*. அது ஜனநாயக கடமை. அரசாங்கத்தின் கட்டளைக்கு நாம் கீழ்படியவேண்டும்.
* அரசாங்க அதிகாரிகள் தான் தேவ ஊழியனாய் இருக்கிறான் என்கிறது வேதம் ரோமர் 13:1-7. ஆகவே, அப்படிப்பட்ட இடத்திற்கு *தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்*.
* யார் அல்லது எப்படிபட்டவர்கள் ஆட்சியில் வந்தாலும், அவர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும் -1தீமோ. 2:2-3
*நாம் ஓட்டுப்போட்டால், ஒருவேளை தேவசித்தத்திற்கு எதிராக வந்து விடாதா*?
நம் ஆகாரத்திற்காக ஜெபிக்கவேண்டும் என்று சொல்லும் வேதம் (மத். 6:11)
ஆகாரத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் சொல்கிறது 2தெச. 3:10.
ஓட்டுப்போடவேண்டும் என்பது அரசாங்கத்தின் கட்டளை. அதை மீறுவது அரசாங்கத்தை எதிர்ப்பதாகும். ஆகவே, கட்டாயம் ஒட்டுப் போடவேண்டும்.
*நாம் விரும்பும் காரியங்களுக்காக ஜெபித்தாலும், தேவன் எதை விரும்புகிறாரோ அதுவே நடைபெறும் என்று சும்மாயிருந்துவிடவேண்டாம்*
* பவுலுக்கு ஒரு பிரச்சனை இருந்தது (2 கொரி. 12: 7-10). தன் விருப்பத்தை 3 முறை தெரிவித்தும், அது நிலைத்ததால், அது தேவடைய சித்தம் என்று புரிந்துகொண்டார்.
* தான் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படப்போகிறதை அறிந்த போதும் அவை விலகக் கூடுமானால் விலகட்டும் என்று ஜெபித்தார் மத்தேயு 26: 36-39 நம் ஆண்டவர். அவர் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டார்.
ஆகவே, நம் கடமையை தேவ சித்தப்படி நாம் உணர்ந்து செயல்படும் படி மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும். உபதேசியாளர்களுக்கு அது மிக மிக அவசியமான கடமை. (யோனா 3: 4-10)
*முடிவு தேவ சித்தப்படி நடக்கும்*.
ஏதாவது காரணங்களை / சாக்குபோக்கு சொல்லி யோனாவை போல தர்ஷீசுக்கு ஓடிப்போய் விடகூடாது !!
...நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்... எஸ்தர் 4:14….
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*
செவ்வாய், 6 ஏப்ரல், 2021
#1122 - கிறிஸ்தவர்கள் தேர்தலில் ஓட்டுப் போடலாமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக