*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நீதியின் தேவனாகிய பிதாவானவருக்கே சகல மாட்சிமையும் உண்டாவதாக.
கிறிஸ்தவரல்லாதவரிடத்தில் இருக்கும் பயம் கூட கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
விபச்சாரம், வேசித்தனம் என்ற *சரீர உறவான* பழைய சட்டத்தை நீக்கி, *தவறான பார்வையே அல்லது தவறான கற்பனையே* வேசித்தனம் என்று கிறிஸ்து தன்னுடைய புதிய நியமனத்தில் கொண்டு வந்தார்.
இன்னொருவரின் மனைவியை / கணவனை விருப்பத்தோடு பார்த்து, என் மனைவி / கணவன் இப்படி இல்லை, அப்படி இல்லை என்று ஒப்பிடுவதை வேதாகமம் வண்மையாய் கண்டிக்கிறது. யூதா 1:7
சொந்த மனைவியும் / கணவனும் “தேவனுடைய தெரிந்தெடுத்தல்” என்பதை மறக்க கூடாது. அவர் திட்டமில்லாமல் ஒரு மயிரும் விழாத போது, வாழ்க்கையை அவர் திட்டமிடாமல் விட்டாரோ? நிச்சயமாக இல்லை. செய்த தவறுகளினாலேயே குடும்ப பிரிவுகள் ஏற்படுகிறது. அப். 27:34
சொந்த மனைவியிடம் / கணவனிடம் விரிசலை வைத்து கொண்டு, விழுந்து ஜெபிப்பதும்,
உபவாசித்து ஜெபிப்பதும்,
ஊக்கமாய் ஜெபிப்பதும்,
ஒப்புகொடுத்து ஜெபிப்பதும்,
ஒருவிசை கூட்டி ஜெபிப்பதும்,
அழுது ஜெபிப்பதும்…. எப்படி ஜெபித்தாலும், உபதேசித்தாலும் அது முற்றிலும் ஊருக்காக போடும் *மாய்மாலம்*.
சொந்த மனைவியின் அல்லது கணவன் மீது சந்தேகமும், எரிச்சலும், விரோதமும், அதிருப்தியும் வைத்திருப்பதை ஒருவருக்கொருவர் விட்டு, *தேவன் கொடுத்த துணையுடன் அன்போடு வாழ வேதம் போதிக்கிறது*. கிறிஸ்து தன் மணவாட்டிக்காக சிலுவையையே ஏற்றுக்கொண்டார். நமக்கு என்ன தடை?
வேத வசனத்தை அநுதினம் படித்தாலும், எப்போதும் ஜெபித்தாலும் சொந்த கணவனிடம் / மனைவியிடம் அன்பில்லாமலும், செய்ய வேண்டிய கடமைகளுக்கு உட்படாமலும் இருந்தால், போடும் காணிக்கைக்கே அங்கீகாரம் இல்லை. மத். 23:19, 5:24, 23:23
மனைவிக்கு தலை – *சொந்த* கணவன்.
கணவனுக்கு தலை – ஆண்டவராகிய கிறிஸ்து.
தலை அமைதியாகவும்,
சரீரம் மேடையிலும் *பிரசங்கம் செய்ய ஏறினதோ* பரலோகத்திற்கு போய்க்கொண்டிருந்த பாதையும் மாறிவிட்டது.
இவைகளை உணர்ந்து மனந்திரும்பி சீர்படுத்தப்பட வேண்டும்.
இன்றும் நமக்கு இந்த நாளின் வேத துளியை படிக்க ஜீவனை தேவன் கொடுத்திருந்தாரென்றால் – மனம் மாறும்படியான அழைப்பு !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக