*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
இரட்சகர் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்தவ மதத்தினர் கொண்டாடும் கிறிஸ்துமஸ்க்கும், ஈஸ்டருக்கும் மற்ற பண்டிகைகளுக்கும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் சொல்லும் வாழ்த்து போல சபை பிரசங்கங்களும் ஆகிவிடக்கூடாது.
நீங்க ஆசீர்வாதமா இருக்கணும், பொய் பேசக்கூடாது, திருடக்கூடாது, புகைப்பிடிக்கூடாது, சாராயம் குடிக்கக்கூடாது, தவறாமல் சபைக்கு வரணும், எல்லாரிடமும் அன்பாக பேசனும், தினம் வேதம் வாசிக்கணும் நல்லா ஜெபம் பண்ணனும் என்ற பொதுவான வாழ்க்கை நெரிமுறைகளையே பெரும்பாலான பிரசங்க மேடைகள் தங்கள் சபையினருக்கு தூபம் போட்டுக்கொண்டு இருப்பதால், சத்தியத்தில் வளராமல் வெதும்பின நிலை உருவாகியுள்ளது.
வேதாகமம் சொல்வதை பின்தொடரும்போது கசக்கத்தான் செய்யும். வசனம் நம்மை சீர்படுத்தும்போது வலிக்கத்தான் செய்யும். சரியான நேரத்தில் காயம் கட்டப்படாவிடில் சீழ்பிடித்திருப்பது வளர்ந்து (கான்சர்) அறிபிளவாகி விடும்.
கண்டிப்பு இல்லையேல்;
ஜனங்களிடத்தில் ஏரோது பேசினது போலவும்;
இயேசு கிறிஸ்துவினிடத்தில் பிசாசு சங்கீதம் 91ஐ பேசினது போலவும் ஆகிவிடும். (அப் 12:21-22, மத் 4:6)
தொடர்பை துண்டிப்பது அல்ல, மனந்திரும்புதலே அவசியம்.
நம் மரணம் வரையிலோ அல்லது கிறிஸ்துவின் வருகை வரையிலோ, நாம் அவர் உபதேசத்தில் நிலைத்திராதிருந்தால் அவர் நம்மை விலக்கிவிடுவார் !!
ஜெபத்தோடு எப்படி நாம் அநுதினமும் துவங்குகிறோமோ, அது போல நம்முடைய ஒவ்வொரு கிரியையும் தேவ வார்த்தையின்படி மாற்ற தீர்மானிப்போம்.
நாம் நிலைத்து நிற்கும்படி, நம்மை ஊன்றக்கட்டுபவர் அவரே ! 2கொரி. 10:8, 13:10
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக