வெள்ளி, 30 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 30 ஏப்ரல் 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

திருமுழுக்கினால் நம்மை இரட்சித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஞானஸ்நான வகைகளை இன்று பட்டியலாக பார்க்கலாம் :

1-பேரழிவின் காலத்தில் இரட்சிக்கப்பட்ட நோவா உட்பட 8 பேரும் கடந்து வந்த சம்பவம் - ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது 1பேதுரு 3:20-21

2-இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தை வெட்டாந்தரையாக கடந்து வந்த சம்பவம் - ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. 1கொரி. 10:1-2

3-ஜனங்கள் பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்புதலுக்கென்று கொடுத்த ஞானஸ்நானம் யோவான்ஸ்நானன் கொடுத்தது..  மத். 3:5-6, 11, மாற்கு 1:4, லூக்கா 3:6, அப். 19:4

4- இயேசு கிறிஸ்து எடுத்துக்கொண்ட ஞானஸ்நானம் தேவனுடைய நீதியை நிறைவேற்ற. மத். 3:15

5-கிறிஸ்துவின் வருகைவரை, அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களை சுட்டெரித்து அழிப்பது - அக்கினி ஞானஸ்நானம். மத் 3:11-12; லூக்கா 3:16,17 (அக்கினியால் ஞானஸ்நானம் வேண்டும் என்பவர்கள்  கவனிக்கவும்)

6-நமக்காக சிலுவையில் மரித்ததை ஞானஸ்நானதிற்கு ஒப்பிடுகிறார் இயேசு கிறிஸ்து. (மத் 20:22-23; மாற்கு 10:38-39; லூக்கா 12:50)

7-அப்போஸ்தலருக்கு கொடுக்கப்பட்டது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – அப். 2:17-18

8-ஒரு குறிப்பிட்ட யூத மார்க்கத்தினர், மரித்தாலும் எப்படியாவது பரலோகம் அனுப்பி வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில், விசுவாசித்து, மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முடியாத மரித்த உடலுக்கு தங்கள் அறியாமையினால் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். - 1கொரி. 15:29

9- நம் அனைவருக்கும் உள்ள ஞானஸ்நானமோ, இயேசு கிறிஸ்துவின் கட்டளைப்படியுள்ள *பாவ மன்னிப்பிற்கென்று*  கொடுக்கபடுகிறது – மாற்கு 16:16, அப். 22:16, 2:38

ஏறத்தாழ 15 வகை மறைமுகமாக சொல்லப்பட்டாலும், மேலே கூறியவை நேரடியான அர்த்தம் உள்ளவைகள்.

வேதம் நமக்கு கற்பிக்கும் – “*ஒரே ஞானஸ்நானம்*” என்பது – மேற்கூறிய பட்டியலில் 9வது !!

பாவமன்னிப்பிற்கென்று நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? இன்றும் காலம் இருக்கிறது – தேவனுடைய இராஜ்ஜியத்தில் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக