*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பரலோகத்திற்கு அழைத்து செல்ல வல்லவரான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சிலுவையில் தொங்கிக் கொண்டு இருந்த கள்ளன் பரதீசிற்கு எப்படி போனான்?
அவன் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டானோ?
ஆகவே, நானும் ஞானஸ்நானம் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் இன்னமும் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆனால், கிறிஸ்துவுடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த கள்ளனை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் கீழே :
* இயேசுவை - *தேவன்* என்று உணர்ந்திருந்தான் !! லூக். 23:40
* தான் பாவம் செய்தவன் என்று உணர்ந்தவன் !! வ41
* இயேசு குற்றமற்றவர் என்று அறிந்தவன். !! வ41
* இயேசுவை *தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டான்* !! வ42
* பரலோக இராஜ்யம் உண்டென்பதை அறிந்திருந்தான் !! வ42
* தன் வாழ்க்கை முடிந்து விட்டது, மரிக்க போகிறேன் என்றறிந்தும், மறு வாழ்வு உண்டு என்று நம்பினான் !! வ42
* பூமியிலிருந்தே பாவங்களை மன்னிக்கும் வல்லமையும் அதிகாரமும் உள்ளவராயிருந்த கிறிஸ்து இயேசு, அவனுடைய பாவத்தை மன்னித்து பரதீசுக்கு அழைத்து சென்றார் !! (மத். 9:6)
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தபின் கட்டளையிட்டது, *பாவங்கள் மன்னிக்கப்பட – ஞானஸ்நானம் எடுக்க சொன்னார்* !! மத். 28:18-19
நித்தியக் கட்டளைக்கு கீழ்படிய இன்னும் யோசிக்கவேண்டாம் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக